Doctor Vikatan: என் வயது 30. எனக்கு இரண்டு தொடைகளும் உரசி உரசி அடிக்கடி புண்ணாகின்றன. இதற்கு என்ன காரணம், தடுக்க முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா. நீங்கள் உடல்பருமன் கொண்டவரா என்பது தெரியவில்லை. பொதுவாகவே உடல் பருமன் உள்ளவர்களுக்கு, குறிப்பாக... இந்தியப் பெண்களுக்கு இயல்பான உடல் அமைப்பின் காரணமாகவும் இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதியும், தொடைப் பகுதியும் சற்றே சதைப்பற்றுடன் இருப்பது மிகவும் சகஜமானது. இதன் காரணமாக நடக்கும்போதோ அல்லது பிற வேலைகளின்போதோ தொடைகள் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து உராயும்போது, அந்த இடம் புண்ணாகிறது. கோடைக்காலத்தில் வியர்வை கசிவதால் பூஞ்சைத் தொற்று (Fungal infection) ஏற்படலாம். வியர்வையோடு உராய்வும் அதிகமாகும் போது அந்த இடத்தில் புண்கள் அல்லது கடுமையான எரிச்சல் வரலாம். தரமான பருத்தியால் ஆன தளர்வான உடைகள் (Cotton Trousers) அல்லது காட்டன் சைக்கிளிங் ஷார்ட்ஸ் (Cotton Cycling Shorts) போன்றவற்றை ஆடைகளுக்கு உள்ளே அணிந்து கொள்ளலாம். இது தொடைகள் நேரடியாக உராயாமல் தடுக்கும். தொட...