Skip to main content

Doctor Vikatan: பால் குடித்தால் அல்சர் பாதிப்பு சரியாகுமா, காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டுமா?

Doctor Vikatan: என் வயது 37. எனக்கு கடந்த ஆறு மாதங்களாக அல்சர் பாதிப்பு இருக்கிறது. எந்த உணவு சாப்பிட்டாலும் வயிற்று வலி அதிகரிக்கிறது. இதை எப்படித் தடுக்கலாம்.... அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் பால் குடித்தால் வலி குறையும் என்பது உண்மையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம்.

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்

அல்சர் பாதிப்பு உள்ளவர்கள்  முதலில் நேரத்திற்குச் சாப்பிட வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு நேரங்களில் தவறாமல் சாப்பிட வேண்டியது அவசியம். அதேபோல், ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீரை இடைவெளியோடு பருக வேண்டும். அதாவது,  இரண்டிரண்டு டம்ளர்களாக காலை, முற்பகல், பிற்பகல், மாலை எனப் பிரித்துக் குடிக்கலாம். 

அல்சர் பாதிப்பு உள்ளவர்கள், உணவில் காரம், புளிப்பு மற்றும் எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்க்க வேண்டும். நிறைய பேருக்கு இப்போது நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் பழக்கம் இருப்பதைப் பார்க்கிறோம். அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் அதைத் தவிர்க்க வேண்டும். இட்லிப் பொடி, ஊறுகாய், வத்தக்குழம்பு, காரக்குழம்பு, கிரேவி மற்றும் குருமா போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

புளி சாதம், லெமன் சாதம், லெமன் ஜூஸ், சாத்துக்குடி, ஆரஞ்சு, புளித்த மோர், தயிர், நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் கபசுர குடிநீர் போன்றவை வயிற்றுப் புண்ணை அதிகப்படுத்தும் என்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும். 

அப்பளம், வத்தல், சிப்ஸ், வடை, பஜ்ஜி, போண்டா, சமோசா மற்றும் பிரியாணி உள்ளிட்ட அனைத்து வறுவல் மற்றும் பொரியல் வகைகளும் வயிற்றைப் புண்ணாக்கலாம் என்பதால் இவற்றையும் சாப்பிட வேண்டாம். 

அப்பளம், வத்தல், சிப்ஸ், வடை, பஜ்ஜி, போண்டா, சமோசா மற்றும் பிரியாணி உள்ளிட்ட அனைத்து வறுவல் மற்றும் பொரியல் வகைகளும் வயிற்றைப் புண்ணாக்கலாம்

மன அழுத்தம் (Stress), அதிகப்படியான கவலை மற்றும் சரியான நேரத்திற்குத் தூங்காமல் இருப்பது அமிலத்தன்மையை (Acidity) அதிகரித்து வயிற்றுப் புண்களை உண்டாக்கலாம். எனவே, மனதை அமைதியாக வைத்துக்கொள்வதும், போதுமான நேரம் தூங்குதும் அவசியம்.

பால் குடிப்பது அல்சருக்கான நிரந்தர மருந்தல்ல. அந்த நேரத்தில் ஏற்படும் வலியைப் போக்குவதற்கு மட்டுமே பால் உதவலாம், அது ஒரு மாற்று மருந்து கிடையாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...