Skip to main content

Doctor Vikatan: உரசி, உரசிப் புண்ணாகும் தொடைகள்... நிரந்தர தீர்வே கிடையாதா?

Doctor Vikatan: என் வயது 30. எனக்கு இரண்டு தொடைகளும் உரசி உரசி அடிக்கடி புண்ணாகின்றன. இதற்கு என்ன காரணம், தடுக்க முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமநல மருத்துவர் பூர்ணிமா.

சருமநல மருத்துவர் பூர்ணிமா.
சருமநல மருத்துவர் பூர்ணிமா.

நீங்கள் உடல்பருமன் கொண்டவரா என்பது தெரியவில்லை. பொதுவாகவே உடல் பருமன் உள்ளவர்களுக்கு, குறிப்பாக... இந்தியப் பெண்களுக்கு இயல்பான உடல் அமைப்பின் காரணமாகவும் இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதியும், தொடைப் பகுதியும் சற்றே சதைப்பற்றுடன் இருப்பது மிகவும் சகஜமானது. 

இதன் காரணமாக நடக்கும்போதோ அல்லது பிற வேலைகளின்போதோ தொடைகள் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து உராயும்போது, அந்த இடம் புண்ணாகிறது.

கோடைக்காலத்தில் வியர்வை கசிவதால் பூஞ்சைத் தொற்று (Fungal infection) ஏற்படலாம். வியர்வையோடு உராய்வும் அதிகமாகும் போது அந்த இடத்தில் புண்கள் அல்லது கடுமையான எரிச்சல் வரலாம்.

தரமான பருத்தியால் ஆன தளர்வான  உடைகள் (Cotton Trousers)   அல்லது காட்டன் சைக்கிளிங் ஷார்ட்ஸ் (Cotton Cycling Shorts) போன்றவற்றை ஆடைகளுக்கு உள்ளே அணிந்து கொள்ளலாம். இது தொடைகள் நேரடியாக உராயாமல் தடுக்கும்.

தொடைகள் உராயும் பகுதியில் தடவிக் கொள்ளக்கூடிய உராய்வுத் தடுப்பு க்ரீம்களை (Anti-chafing creams)  பயன்படுத்தலாம்.

தொடைகளில் ஏற்படும் இந்த உராய்வுப் பிரச்னைக்கு, உடல் எடையைக் குறைப்பது ஒன்றுதான் முக்கியமான மற்றும் நிரந்தரத் தீர்வாகும்.

ஏற்கெனவே உராய்வு ஏற்பட்டு புண்ணாகியிருக்கும் இடத்தில், மீண்டும் புதிய சருமம் ஆரோக்கியமாக உருவாவதற்கு 'ஸிங்க் ஆக்ஸைடு' கலந்த க்ரீம்களை (Zinc Oxide Cream)  பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் டயப்பர் ராஷ் க்ரீம்களில் உள்ள துத்தநாக ஆக்ஸைடு, சருமத்தின் மேல் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி, புண்ணை ஆற்ற பெரிதும் உதவும். இவை எல்லாமே தற்காலிகத் தீர்வுகள்தான். 

தொடைகளில் ஏற்படும் இந்த உராய்வுப் பிரச்னைக்கு, உடல் எடையைக் குறைப்பது ஒன்றுதான் முக்கியமான மற்றும் நிரந்தரத் தீர்வாகும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...