Doctor Vikatan: முளைகட்டிய தானியங்களை (Sprouted grains) பச்சையாகச் சாப்பிடுவது நல்லதா அல்லது வேகவைத்துச் சாப்பிடுவது நல்லதா... இவற்றைச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை வருமா? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம். கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர் முளைகட்டிய தானியங்களை (Sprouts) எப்போதும் பச்சையாகச் சாப்பிடும்போது, பலருக்கு அசிடிட்டி (Acidity), கேஸ்ட்ரைட்டிஸ் (Gastritis) மற்றும் தொற்று (Infection) போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், நாம் எந்த வகையான பயறை முளைக்கட்ட வைக்கிறோம் என்பதைப் பொறுத்தும் இது மாறுபடும். சிலர் கொள்ளு, கொண்டைக்கடலை போன்றவற்றை முளைக்கட்ட வைத்து, அதைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, அது கண்டிப்பாக அதிக வாயுத் தொல்லையை (Gaseous) உருவாக்கும். எனவே, முளைக்கட்டிய தானியங்களை, பச்சையாகச் சாப்பிடுவதைவிட, அவற்றை 5 முதல் 10 நிமிடங்கள் வரை நன்றாக ஆவியில் வேகவைத்து (Steam பண்ணி) சாப்பிடுவதுதான் எப்போதும் மிகச்சிறந்த வழிமுறையாக இருக்கும். சில நிமிடங்கள் வேகவைத்த பிறகு, அதனை சாலட்களில் (Salads) சேர...