Skip to main content

Posts

Doctor Vikatan: பல வருடங்களாகப் பார்க்கும் தையல் வேலை... அடி வயிற்று வலிக்குக் காரணமாகுமா?

Doctor Vikatan: நான் 10 வருடங்களாக டெய்லரிங் வேலை செய்து வருகிறேன். அதுதான் எங்கள் குடும்பத்துக்கான பிரதான வருமானம். என் வயது 55. சமீப காலமாக தையல் மெஷினில் தைக்கும்போது எனக்கு அடி வயிறு வலிக்கிறது.  தையல் வேலையைத் தொடர்ந்து செய்தால் இதுபோன்ற பிரச்னை வரும் என்றும் அதை நிறுத்துமாறும் சிலர் சொல்கிறார்கள். தையல் வேலைக்கும் அடிவயிற்று வலிக்கும் தொடர்பு உண்டா? அல்லது இதற்கு வேறு காரணங்கள் இருக்குமா? பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி. மருத்துவர் ஸ்ரீதேவி 55 வயதில் அடிவயிற்றில் வலி வருவதற்கு நீங்கள் பார்க்கும் தையல் வேலை மட்டும் காரணமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது, கால்களால் தையல் மெஷினை மிதித்துக்கொண்டே இருப்பது, குனிந்து வேலை பார்ப்பது போன்றவற்றால் சில பெண்களுக்கு இடுப்பு வலியும், கீழ்வயிற்றுப் பகுதித் தசைகளில் அழுத்தமும், இடுப்பு மற்றும் முதுகுவலியும் வரலாம். அதிகமாக வேலை செய்யும் நாள்களில் இவற்றை நீங்கள் உணரலாம். தையல் வேலை செய்வதால் கர்ப்பப்பையில் பிரச்னைகள் வரும் என நினைத்து பயப...

Ebola: காய்ச்சல் இருக்கிறதா? காங்கோ, உகாண்டா, சூடானில் இருந்து வருபவர்களுக்கு இந்திய அரசு அட்வைஸ்!

Ebola வைரஸ் பரவல் தற்போது உலகின் தலைவலியாக மாறியுள்ளது. காங்கோ, உகாண்டா, தென் சூடான் ஆகிய நாடுகளில் மிக வேகமாக எபோலா வைரஸ் பரவி வருவதால், அந்த நாடுகளில் இருந்து வரும் இந்திய மக்கள் அல்லது பயணிகளுக்கு பாதுகாப்பு நெறிமுறைகளை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. சுகாதார சேவைகள் பொது இயக்குநரகம் (DGHS) கொடுத்துள்ள நெறிமுறையின் படி, காய்ச்சல், சோர்வு, தலைவலி, தசை வலி, வாந்தி, DGHS அறிவுறுத்தல் 'இந்திய ரூபாய் ரூ.100-ஐ தொட்டால் தொடட்டும்; வெளிநாடு முதலீடுகள் இந்தியா வரும்!' - பொருளாதார நிபுணர் வயிற்றுப்போக்கு, ரத்தப்போக்கு (பல்ஈறு, மூக்கு, சிறுநீர், வாந்தி ஆகியவற்றில் காரணமில்லாமல் ரத்தம் வந்தால்), தொண்டை புண் ஆகிய அறிகுறிகள் இருந்தாலோ... எபோலா இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருந்தாலோ அல்லது நோய் பாதிக்கப்பட்டிருக்கும் நபரின் ரத்தம் அல்லது அவர்களது உடல் திரவங்களோடு கான்டாக்ட் ஏற்பட்டிருந்தாலோ இமிக்ரேஷனுக்கு முன், விமான நிலைய சுகாதார அதிகாரி அல்லது ஹெல்த் டெஸ்க்கில் கூறியிருக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்த 21 நாள்களுக்குள் மேலே சொன்ன ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை ...

Doctor Vikatan: ஸ்டீராய்டு எடுத்தால் கட்டுக்கோப்பான உடல்வாகு சாத்தியமா... எடை குறையுமா?

Doctor Vikatan: ஜிம் செல்பவர்கள் மற்றும் பாடிபில்டிங் செய்பவர்களிடையே உடலை விரைவாகக் கட்டமைக்க  அனபாலிக்  ஸ்டீராய்டு பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக மருத்துவ எச்சரிக்கைகள் வெளியாகி வருகின்றன. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஜிம்மில் கொடுக்கப்படும் ஸ்டீராய்டுகளை உட்கொள்வதால், அது  பிற்காலத்தில்  உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துமா... இயற்கை முறையில் உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க நினைப்பவர்களுக்கும், இந்த ஸ்டீராய்டு மாயையில் சிக்கியவர்களுக்கும் உங்களின்  அறிவுரை என்ன? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ். ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் அனபாலிக் ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்துபவர்கள், அதுகுறித்த முறையான கல்வியும் அனுபவமும் உள்ள ஒரு நபரின் வழிகாட்டுதலைப் பெற்று எடுத்துக்கொள்வது நல்லது. அப்படிச் செய்யும்போது உங்களுக்கு உடல்நல பாதிப்புகள் (Health Implication) பெரிய அளவில் வராது. ஏனெனில், அவர்கள் முதலில் உங்களை ரத்தப் பரிசோதனை (Blood Test) செய்யச் சொல்வார்கள். அந்த ரத்தப் பரிசோதனையில் முக்கியமான அளவீடுகள் (Parameters) அனைத்...

Doctor Vikatan: செக்கு எண்ணெய் வாங்க வசதியில்லை; ரேஷன் பாமாயில் பயன்படுத்தினால் இதயநோய் வருமா?

Doctor Vikatan: நான் ஓர் இல்லத்தரசி. ரேஷன் கடையில் தரும் பாமாயில் மற்றும் ரீஃபைண்ட் எண்ணெய்களைப் பயன்படுத்தி சமைத்து வருகிறேன். செக்கு எண்ணெய் வாங்க வசதி இல்லை. இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துவதால் இதய நோய் வருமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் இன்று பரவலாகப் பலரும் செக்கு எண்ணெய் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். விலை சற்று அதிகம் என்பதால் அதைப் பயன்படுத்த முடியவில்லையே என்ற உங்களது கவலை புரிகிறது. ஆனால், இது குறித்து நீங்கள் ரொம்பவும் கவலைப்பட வேண்டியதில்லை.  நியாயவிலைக் கடைகளில் (ரேஷன் கடைகளில்) வழங்கப்படும் பாமாயில் (Palm Oil) மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் (Refined Oil) ஆகியவற்றைத்தான் பெரும்பான்மையான மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகிறார்கள். பாமாயிலில் சாச்சுரேட்டடு ஃபேட் (Saturated Fat) சற்றே அதிகமாக உள்ளது. எனவே, இதை அதிக அளவில், நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் (LDL Cholesterol) அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது....