Doctor Vikatan: நான் 10 வருடங்களாக டெய்லரிங் வேலை செய்து வருகிறேன். அதுதான் எங்கள் குடும்பத்துக்கான பிரதான வருமானம். என் வயது 55. சமீப காலமாக தையல் மெஷினில் தைக்கும்போது எனக்கு அடி வயிறு வலிக்கிறது. தையல் வேலையைத் தொடர்ந்து செய்தால் இதுபோன்ற பிரச்னை வரும் என்றும் அதை நிறுத்துமாறும் சிலர் சொல்கிறார்கள். தையல் வேலைக்கும் அடிவயிற்று வலிக்கும் தொடர்பு உண்டா? அல்லது இதற்கு வேறு காரணங்கள் இருக்குமா? பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி. மருத்துவர் ஸ்ரீதேவி 55 வயதில் அடிவயிற்றில் வலி வருவதற்கு நீங்கள் பார்க்கும் தையல் வேலை மட்டும் காரணமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது, கால்களால் தையல் மெஷினை மிதித்துக்கொண்டே இருப்பது, குனிந்து வேலை பார்ப்பது போன்றவற்றால் சில பெண்களுக்கு இடுப்பு வலியும், கீழ்வயிற்றுப் பகுதித் தசைகளில் அழுத்தமும், இடுப்பு மற்றும் முதுகுவலியும் வரலாம். அதிகமாக வேலை செய்யும் நாள்களில் இவற்றை நீங்கள் உணரலாம். தையல் வேலை செய்வதால் கர்ப்பப்பையில் பிரச்னைகள் வரும் என நினைத்து பயப...