கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே உடல் சூடு, சோர்வு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை நம்மை வாட்டத் தொடங்கும். இதற்காக அவசர கதியில் மருந்தகங்களில் கிடைக்கும் ORS கரைசலையோ அல்லது கடைகளில் விற்கப்படும் செயற்கை குளிர்பானங்களையோ நாடுவது எப்போதும் சரியான தீர்வாகாது. சித்த மருத்துவர் அபிராமி ORS கரைசலை யாரெல்லாம், எப்போது பயன்படுத்த வேண்டும், சர்க்கரை நோயாளிகளுக்கான பிரத்யேக கோடைக்கால பானங்கள் எவை, சளி மற்றும் சைனஸ் தொல்லை இருப்பவர்கள் வெயிலை எப்படிச் சமாளிப்பது? அத்தனை கேள்விகளுக்கும் விளக்கங்கள் அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர், 'மூலிகைமணி' அபிராமி. ஓஆர்எஸ் என்பது.... ஓஆர்எஸ் (Oral Rehydration Solution) என்பது உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைத்த ஃபார்முலா. இது உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைந்த நிலையில் இருப்பவர்களுக்கான சிகிச்சை முறை (Therapeutic). சிலர் தேவையின்றி ஓஆர்எஸ் பவுடரை வாங்கி வைத்துக்கொண்டு குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இன்னும் சிலர், போலியான ஓஆர்எஸ் பவுடர்களை அடிக்கடி குடித்துக்கொண்டிருப்பார்கள். உண்மையில் இரண்டுமே ...