Skip to main content

வெயிலை வெல்லும் வித்தை: தீர்வாகுமா ORS கரைசல்?

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே உடல் சூடு, சோர்வு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை நம்மை வாட்டத் தொடங்கும். இதற்காக அவசர கதியில் மருந்தகங்களில் கிடைக்கும் ORS கரைசலையோ அல்லது கடைகளில் விற்கப்படும் செயற்கை குளிர்பானங்களையோ நாடுவது எப்போதும் சரியான தீர்வாகாது.  

சித்த மருத்துவர் அபிராமி
சித்த மருத்துவர் அபிராமி

ORS கரைசலை யாரெல்லாம், எப்போது பயன்படுத்த வேண்டும், சர்க்கரை நோயாளிகளுக்கான பிரத்யேக கோடைக்கால பானங்கள் எவை, சளி மற்றும் சைனஸ் தொல்லை இருப்பவர்கள் வெயிலை எப்படிச் சமாளிப்பது?

அத்தனை கேள்விகளுக்கும் விளக்கங்கள் அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர், 'மூலிகைமணி' அபிராமி.

ஓஆர்எஸ் என்பது....


ஓஆர்எஸ் (Oral Rehydration Solution) என்பது உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைத்த ஃபார்முலா. இது உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைந்த நிலையில் இருப்பவர்களுக்கான சிகிச்சை முறை (Therapeutic).

சிலர் தேவையின்றி ஓஆர்எஸ் பவுடரை வாங்கி வைத்துக்கொண்டு குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இன்னும் சிலர், போலியான ஓஆர்எஸ் பவுடர்களை அடிக்கடி குடித்துக்கொண்டிருப்பார்கள். உண்மையில் இரண்டுமே தவறுதான்.

‘ஓஆர்எஸ்’

ஓஆர்எஸ் பவுடரில், சோடியம் குளோரைடு (2.5 முதல் 3 கிராம் வரை), பொட்டாசியம் குளோரைடு (1.5 கிராம்), சோடியம் சிட்ரேட் (2.9 கிராம்) மற்றும் குளுக்கோஸ் (13 முதல் 14 கிராம்வரை) சரியான அளவில் கலந்திருக்க வேண்டும். 1 லிட்டர் நீரில் 21 கிராம் ஓஆர்எஸ் பவுடரைச் சேர்க்க வேண்டும்.

சாதாரணமாக இருப்பவர்கள் ஓஆர்எஸ் கரைசலை அடிக்கடி குடிக்க வேண்டிய அவசியமில்லை. இது வெயில் கொடுமையால் மயக்கம் அடைந்தவர்கள் அல்லது வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான முதலுதவி போன்றது.

ஓஆர்எஸ் என்பது மற்ற இயற்கை பானங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதும் அல்ல. வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நீர்ச்சுருக்கு, உடல் சூடு மற்றும் சோர்வைத் தவிர்க்க ஓஆர்எஸ் கரைசல், மருந்து போலவெல்லாம் செயல்படாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீர் வறட்சியைப் போக்கும் பானங்கள்....

இளநீர் மற்றும் நுங்கு

நம்மூரில் எளிதாகக் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த இயற்கை பானம் இளநீர். நுங்கு மற்றும் பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீர், தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் நீரா ஆகியவையும் உடலுக்குக் குளிர்ச்சியையும், உடனடி ஆற்றலையும் தருகின்றன.

வெயிலில் வெளியே செல்ல வேண்டியவர்கள், அடிக்கடி இவற்றை எடுத்துக்கொண்டால், உடல் வறட்சி தவிர்க்கப்படும். இவை புளிக்காமல் இருக்க வேண்டியது அவசியம். புளித்துவிட்டால் அவற்றை தென்னங்கள், பனங்கள் என்று சொல்கிறோம். 

உப்பு சேர்த்த நீர்மோர்

இரண்டு அல்லது மூன்று டேபிள்ஸ்பூன் தயிரில், 200 முதல் 300 மில்லி நீர் சேர்த்துக் கலந்து கடைந்து கொள்ளவும். அதில் சிறிது உப்பு சேர்த்துக் குடிப்பது சிறந்தது.  வெயிலால் பலருக்கும் வயிற்றுக் கடுப்பு ஏற்படும். அதாவது பசி குறைவாக இருக்கும்.  உடல் சூடு அதிகமாக இருக்கும். லேசான காரம் சாப்பிட்டாலும் வயிற்றுப்போக்கு ஏற்படும். இதற்கெல்லாம் நீர்மோர் மிகச் சிறந்த உணவு. இதில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

வெயிலில் விளையாடும் குழந்தைகளுக்குக் கரும்புச் சாறு சிறந்த ஆற்றலையும், குளிர்ச்சியையும் தரும்.

பழைய சோறு அல்லது நீராகாரம்

இரவு சோற்றில் நீர் ஊற்றி வைத்து, காலையில் அதை நன்றாகக் கரைத்து உப்பு சேர்த்துக் குடிக்கும் நீராகாரம், கோடையில் ஒரு கவசம் போலச் செயல்படும். அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குடலுக்கு நன்மை செய்யும்.

இதனுடன் இரண்டு, மூன்று சின்ன வெங்காயம் சேர்த்துப் பருகுவது உடல் சூட்டைத் தணிக்கும். இதேபோல் ராகி கூழ் மற்றும் கம்பங்கூழ் ஆகியவையும் கோடைக்காலத்திற்கு உகந்தவை.

குழந்தைகளுக்கு கரும்புச் சாறு

வெயிலில் விளையாடும் குழந்தைகளுக்குக் கரும்புச் சாறு சிறந்த ஆற்றலையும், குளிர்ச்சியையும் தரும். சர்க்கரைநோய் (Diabetes) உள்ளவர்கள் கரும்புச் சாற்றைத் தவிர்க்க வேண்டும்.

இவை தவிர, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, தர்பூசணி, திராட்சை, மாதுளை ஜூஸ்கள் கோடைக்கேற்ற டாப் பானங்கள் என்றே சொல்லலாம். சர்க்கரைநோய் இல்லாதவர்கள், இவற்றை அப்படியேவும் குடிக்கலாம், சிறிது தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் குடிக்கலாம்.

கடைகளில் கிடைக்கும் ஜூஸ்களில் சர்க்கரை சேர்ப்பார்கள். ஜூஸில் இயல்பிலேயே சர்க்கரை அதிகமிருக்கும். கூடுதலாக சர்க்கரை சேர்ப்பது தேவையற்றது. முடிந்தவரை எந்த ஜூஸிலும் சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிப்பதுதான் அதன் இயற்கையான மணம் மற்றும் சுவையை ருசிக்க உதவும். 

சிலருக்கு வெயில் நேரத்தில் பித்தம் அதிகமாகும். அதிகம் வியர்த்துக்கொட்டும். வாந்தி வரும். இவர்களுக்கெல்லாம் சிட்ரஸ் பழங்களை ஜூஸாக்கிக் கொடுக்கலாம். சிட்ரஸ் பழங்கள் சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்னை வருவதாகச் சொல்பவர்கள், மாதுளை மற்றும் தர்பூசணி ஜூஸ் குடிக்கலாம். நிறைய வியர்வை வெளியேறும்பட்சத்தில் இந்த ஜூஸில் சிட்டிகை உப்பு சேர்த்துக் குடிக்கலாம். சர்க்கரைநோயாளிகள் எந்த ஜூஸையும் குடிக்க வேண்டாம்.

சம்மரிலும் சளி பிடிக்குதா?

சிலருக்கு வெயில் காலத்திலும் சளி பிடிக்கும். வியர்த்துக்கொட்டியே ஜலதோஷம் பிடிப்பவர்கள் இருக்கிறார்கள்.  உடல் சூடும் குறைய வேண்டும்.  சளியும் பிடிக்கக்கூடாது என்பவர்களுக்கு புழுங்கலரிசிக் கஞ்சி பெஸ்ட்.  புழுங்கலரிசியை குருணை போல மிக்சியில் உடைத்துக்கொண்டு, 2-3 பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் குழைய வேக வைத்துக்கொள்ளவும். அதில் உப்பு சேர்த்துக் குடிக்கலாம்.  உடல் வெப்பமும் தணியும். யூரினரி இன்ஃபெக்ஷனும் வராது. 

சூடாகக் காய்ச்சிய பாலில் பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம். அல்லது பாதாம் சேர்த்துக் குடிக்கலாம். உடல் சூடும் தணிய வேண்டும், சளியும் பிடிக்கக்கூடாது என்பவர்களுக்கான சாய்ஸ் இவை எல்லாம். 

வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுத்தமான 'ஜிகர்தண்டா' உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவும் சிறந்த பானம்.

இயற்கையான ஜிகர்தண்டா

கடைகளில் விற்கப்படும் மில்க் ஷேக்குகள் மற்றும் ஐஸ்கிரீம்கள் செயற்கையான முறையில் பதப்படுத்தப்பட்டவை. அவற்றுக்கு மாற்றாக வீட்டிலேயே சத்தான பானங்களைத் தயாரிக்கலாம்.
சிறிதளவு பாதாம் பிசினை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.

அது ஊறியதும்  ஜெல்லி போன்ற பதத்திற்கு வரும். இதை மிக்சியில் போட்டு, அதனுடன் பாதாம், முந்திரி போன்ற நட்ஸ்  வகைகள் (Nuts) மற்றும் உலர் பழங்களைச் (Dry fruits) சேர்த்துக் கொள்ளவும். இவற்றுடன் பால் சேர்த்து  அரைத்தால், வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுத்தமான 'ஜிகர்தண்டா' தயார். 

இது உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவும்  சிறந்த பானம். இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகள்  இதைத் தவிர்க்க வேண்டும்.

கெமிக்கல் இல்லாத ரோஸ் மில்க் (Rose Milk)

பொதுவாகக் கடைகளில் கிடைக்கும் ரோஸ் மில்க் செயற்கை நிறமூட்டிகள், அதிக சர்க்கரை மற்றும் கெமிக்கல் சிரப் கொண்டு தயாரிக்கப்படுகிறது.  இப்படி இல்லாமல் இயற்கையான முறையில் ஆரோக்கியமான ரோஸ்மில்க் தயாரிக்கலாம். 

பன்னீர் ரோஜா இதழ்களை ஆவியில் வேகவைத்து, குளிரவைத்து எடுக்கப்படும் சாற்றை, காய்ச்சிய பாலில் கலந்து ரோஸ் மில்க் தயாரிக்கலாம். பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படாத இயற்கையான பன்னீர் ரோஜா இதழ்களை மிக்சியில் குளிர்ந்த பாலுடன் சேர்த்து அரைத்துத் தயாரிக்கலாம்.
இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். வயிற்றுப் புண்களை ஆற்றும். சூட்டைத் தணிக்கும். கோடைக்காலத்தில் பலருக்கு ஏற்படும் மூல நோய் (Piles) பாதிப்பைக் குறைக்கவும் உதவும்.

உடல்சூட்டைத் தணிப்பதில் கடல்பாசி ஆகச் சிறந்த உணவாக இருக்கும்.

குளிர்ச்சிக்கு அகர் அகர் (கடல் பாசி)

அகர் அகர் என்பது ஒரு வகையான  கடல் பாசி. இது பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் (Transparent) சேமியா போன்ற நீண்ட இழைகளாகக் காணப்படும். அகர் அகரைச் சிறு துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்தால் அது கரைந்துவிடும். பிறகு சிறிது நேரத்தில்  இறுகி, இயற்கையான ஜெல்லி (Jelly) போன்று மாறிவிடும். இந்த இயற்கையான ஜெல்லியை, பழங்கள் மற்றும் பாலுடன் சேர்த்து மிக்சியில் அடித்து மில்க் ஷேக் (Milkshake) போலப் பருகலாம். கடைகளில் செயற்கை ஜெல்லி சேர்த்து விற்கப்படும் ஃபலூடா (Falooda) போன்ற உணவுகளுக்கு பதிலாக, இந்த இயற்கையான கடல் பாசி ஜெல்லியைப் பால் அல்லது ஐஸ்கிரீமுடன் கலந்து சாப்பிடலாம். உடல்சூட்டைத் தணிப்பதில் கடல்பாசி ஆகச் சிறந்த உணவாக இருக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கான ஸ்பெஷல் பானங்கள்....

சர்க்கரை நோயாளிகளுக்குப் பழச்சாறுகள், ஐஸ்கிரீம்கள், மில்க் ஷேக்குகள் ஆகியவற்றில் பல கட்டுப்பாடுகள் இருப்பதால், அவர்களுக்கு கலோரிகள் இல்லாத (Zero calorie) இயற்கை பானங்கள்  சிறந்தவை. அந்த வகையில்...

நெல்லிக்காய் ஊறிய இந்த நீர் தாகத்தைத் தணிப்பதோடு, கோடைக்கால வெப்ப அலைகளிலிருந்தும் (Heat waves) உடலைப் பாதுகாக்கும்.

மூலிகை ஊறிய நீர்

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வெட்டிவேர், நன்னாரி வேர் மற்றும் சப்ஜா விதைகளை வாங்கிக் கொள்ளவும். 
 2 லிட்டர் தண்ணீரில் தலா ஒரு டீஸ்பூன் அளவு வெட்டிவேர், நன்னாரி வேர் மற்றும் சப்ஜா விதைகளைச் சேர்த்து இரவு முழுவதும் ஊறவிட வேண்டும். காலையில் இந்த நீரைப் பருகலாம். இது உடலுக்குள்  ஏசி (AC) பொருத்தியது போலச் உணர வைக்கும்.

நெல்லிக்காய் நீர்

ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு நெல்லிக்காயை நன்றாக நசுக்கிப் போட்டு ஊறவைக்க வேண்டும். நெல்லிக்காய் ஊறிய இந்த நீர், தாகத்தைத் தணிப்பதோடு, கோடைக்கால வெப்ப அலைகளிலிருந்தும் (Heat waves) உடலைப் பாதுகாக்கும்.


 தாகத்துக்காக வெயிட் பண்ணாதீங்க!

தீவிர வெப்பத்திலிருந்து உடலைப் பாதுகாக்கவும், வெப்பநிலையைச் சமநிலைப்படுத்தவும் நமது உடல், வியர்த்தல் (Sweating) எனும் இயற்கையான செயலைச் செய்கிறது.
எனவே, தாகம் எடுக்கும்வரை காத்திருக்காமல், அவ்வப்போது போதுமான அளவு தண்ணீரும்,  இயற்கை பானங்களையும் அருந்துவது கோடைக்கால நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.
உடலில் நீர் மற்றும் உப்புச்சத்து குறைவதால் உடல் சோர்வடையும். ரத்த நாளங்களில் ஏற்படும் மாற்றங்களால் கடுமையான தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் மற்றும் வாந்தி போன்ற உணர்வுகள் ஏற்படும். கண்களில் எரிச்சல் மற்றும் கண் சூடு போன்றவை உண்டாகும். அதிகப்படியான வெப்பத்தால்  குழப்பம் (Confusion) மற்றும் மனநிலை மாற்றங்கள் (Mood swings) ஏற்படலாம்.

தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், அவ்வப்போது போதுமான அளவு தண்ணீரும், இயற்கை பானங்களையும் அருந்துவது கோடைக்கால நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.

அதிக பாதிப்புக்குள்ளாகும் நபர்கள்

முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், ஏற்கெனவே இதய பாதிப்புகள், ரத்த அழுத்தம், சிறுநீரகம் மற்றும் சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்கள் வெயிலின் தாக்கத்தால் அதிக பாதிப்புகளைச் சந்திக்கக்கூடும் என்பதால் அவர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். 

உடலில் நீர்ச்சத்து குறையுதா?

சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறினால் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளது என்று அர்த்தம். 
ஆரோக்கியமான நபருக்குச் சிறுநீர் வைக்கோல் நிறத்தில் (Straw-colored) வெளியேற வேண்டும்.   எனவே, தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், அவ்வப்போது இது போன்ற இயற்கை பானங்களை அருந்தி உடலைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'' என்கிறார் சித்த மருத்துவர் அபிராமி.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...