Doctor Vikatan: எனக்கு சமீபத்தில் டைபாய்டு காய்ச்சல் பாதித்து குணமடைந்தேன். அதன் பிறகு முடி உதிர்வு மிக அதிகமாக இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் கோவிட் பாதித்து குணமானபோதும் இதே போல அதிக அளவிலான முடி உதிர்வு இருந்தது. காய்ச்சலுக்கும் முடி உதிர்வுக்கும் என்ன தொடர்பு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை ஸ்ட்ரெஸ்ஸை உண்டாக்கும் ஒரு நிகழ்வுக்குப் பிறகு முடி உதிர்வு இருப்பது என்பது சாதாரணமானதுதான். அதற்கு 'டெலோஜென் எஃப்ளுவியம்' ( Telogen effluvium ) என்று பெயர். அந்த நிகழ்வு, நீங்கள் குறிப்பிட்டதுபோல டைபாய்டு, கொரோனா, டெங்கு காய்ச்சலாகவோ, சமீபத்தில் நடந்த அறுவை சிகிச்சையாகவோ, பிரசவமாகவோ எப்படியும் இருக்கலாம். அதாவது அந்த மாதிரி தருணங்களில் கூந்தலின் வளர்ச்சிநிலையானது அப்படியே நின்றுவிடும். ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்திய அந்தக் காலம் முடிந்ததும் முடிகள் எல்லாம் உதிரத் தொடங்கும். அது நிஜமான முடி உதிர்வு பிரச்னையே அல்ல. தினசரி வாழ்க்கையில் நாம் எல்லோருமே குறிப்பிட்ட எண்ணிக்கையில் முடி உதிர்வ...