Skip to main content

Posts

குமரி: வரிசையாக லாரிகளை நிறுத்தி லஞ்சம்; வைரலான வீடியோ - எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்; எஸ்.பி அதிரடி

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் பெரிய லாரிகளில் கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருக்கிறது. நெல்லையில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிமவளங்கள் செல்கின்றன. போலீஸார் ஓவர் லோடுக்கு ஏற்றர்போல லஞ்சம் வாங்கிக்கொண்டு கடத்தலுக்கு துணைபுரிவதாகவும் குற்றச்சாட்டு இருந்துவருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ள ஆரல்வாய்மொழி காவல் நிலைய போலீஸாரும், நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாரும் இரு மாவட்டங்களிலும் வந்து செல்லும் வாகனங்களை கண்காணித்து வருகின்றனர். கனிமவளம் மட்டுமல்லாது போதை பொருள்கள் கடத்தல், இறைச்சி, மருத்துவ கழிவுகள் கடத்தல் போன்ற பல்வேறு சமூக விரோத செயல்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ ஆறுமுகம் இந்நிலையில் ஆரல்வாய்மொழி பகுதியில் நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸார் வரிசையாக சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனங்களில் சோதனை எதுவும் செய்யாமல், லாரிகளை கடத்திவிட லஞ்சம் வாங்கியுள்ளனர். அதில...

ஒன் பை டூ

தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க ``அ.தி.மு.க என்ற கட்சியில் நடக்கும் அவலங்களை `நறுக்’கென்று ஒரே வார்த்தையில் சொல்லியிருக்கிறார் உதயநிதி. பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தங்களின் நாற்காலி ஆசைக்கு அந்த இயக்கத்தை பலி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். முதலில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக டெல்லிக்கு அடிவருடியானவர்கள், எதிர்க்கட்சியான பிறகு தாங்கள் செய்த ஊழலை மறைக்க ஒன்றிய அரசுக்கு அடிமைச் சேவகம் செய்துகொண்டிருக்கிறார்கள். உண்மையான அ.தி.மு.க தொண்டர்களுக்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். ஆனானப்பட்ட வாஜ்பாய், அத்வானி தொடங்கி இன்றைய பிரதமர் மோடி வரைக்கும் கூட்டணி விவகாரங்களைப் பேச அம்மையார் ஜெயலலிதாவின் வீட்டுக் கதவு திறக்காதா என்று போயஸ் கார்டனில் காத்திருந்த காட்சியைத்தான் தமிழ்நாடு பார்த்திருக்கிறது. ஆனால் இன்று, கமலாலயம் வாசலில், `நான்... நீ...’ என்று போட்டி போட்டுக்கொண்டு காத்துக்கிடக்கிறார் கள் அ.தி.மு.க-வினர். ஒரு கவுன்சிலரைக்கூட ஜெயிக்க வைக்க வக்கில்லாத அண்ணாமலை என்ற அரைவேக்காடு நபரிடம் ஓர் இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரி இவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது, ‘நக்கிக் கு...

மாணவியை சிறப்பு விருந்தினராக அழைத்து தேசியக்கொடி ஏற்றவைத்த பள்ளி நிர்வாகம்; பாராட்டுக்குரிய காரணம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், பந்தல் மண்டபம் அருகில் இயங்கி வருகிறது சரவணய்யர் நடுநிலைப்பள்ளி. கடந்த 1895-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிதான் திருச்செந்தூரில் தொடங்கப்பட்ட முதல் பள்ளி. இப்பள்ளியில் மொத்தம் 180 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். 11 ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிகிறார்கள். தேசியக்கொடி ஏற்றிய மாணவிபள்ளியில் தேசியக்கொடி ஏற்றிய `108 ஆம்புலன்ஸ்' பெண் ஊழியர்; நெகிழ்ச்சியான பின்னணி! பொதுவாக பள்ளிகளில் சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா என்றால் அந்தந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், தாளாளர், சுதந்திரப் போராட்ட தியாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர்களில் ஒருவர் தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம். ஆனால், இந்தப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் 8-ம் வகுப்பு படித்து முடித்த, தேசியத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, அல்லது இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவர்களை சிறப்பு விருந்தினராக பள்ளிக்கு அழைத்து தேசியக்கொடி ஏற்ற வைத்து மரியாதை செய்து வருகிறது இப்பள்ளியின் நிர்வாகம். இந்தாண்டு 74வது  குடியரசு தினவிழாவை முன்னிட்டு, கடந்த ஆண்டு இதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து, தேசியத் திறன...

3,900 பேரை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம் | ஜப்பானில் கடும் பனிப்பொழிவு - உலகச் செய்திகள்

ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் நிறுவனங்களின் பட்டியலில், தற்போது ஐ.பி.எம் நிறுவனமும் இணைந்திருக்கிறது. 3,900 ஊழியர்களை இந்த நிறுவனம் பணிநீக்கம் செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் நேற்றிரவு சரிவர இயங்காததால் பயனாளிகள் சிரமமடைந்தனர்.டொனால்ட் ட்ரம்ப் டொனால்டு ட்ரம்பின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள்மீது விதிக்கப்பட்ட தடையைத் திரும்பப் பெறுவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஸ்பெயினில் மர்ம நபர் இரண்டு தேவாலயங்களின்மீது, தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். நேபாளத்தில் நடந்த விமான விபத்தின் கறுப்புப் பெட்டியை, சிங்கப்பூரில் ஆய்வு செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. உக்ரைனுக்கு 14 `லியோபார்ட் 2' ரக டாங்கிகளை ( Leopard 2 tanks) வழங்க ஜெர்மனி முடிவு செய்திருக்கிறது.மரணம் பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 16 பேர் எரிவாயு கசிந்த விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர். ஜெர்மனியில் உள்ளூர் ரயிலில் கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஜப்பானில் நிலவிவரு...

Sports Round Up: ஜடேஜாவின் அதிரடி முதல் ரொனால்டோவின் தோல்வி வரை!

சேப்பாக்கத்தில் தூள் கிளப்பிய ஜடேஜா! சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ரஞ்சி போட்டியில், தமிழ்நாடு அணியும் சவுராஷ்டிரா அணியும் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் சவுராஷ்டிரா அணி, தமிழ் நாடு அணியை 133 ரன்களில் சுருட்டியது. ஜடேஜா இந்த இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விடுமுறை தினம் என்பதால் மைதானத்திலும் அதிகப்படியான ரசிகர்கள் கூடி ஜடேஜாவுக்காக்ந் ஆரவாரம் செய்திருந்தனர். கடமை; கண்ணியம்; கட்டுப்பாடு! ஹைதராபாத்தில் உள்ள உப்பல் மைதானத்தில் நடைபெற்று வரும் ரஞ்சி போட்டியில், ஹைதராபாத் அணியும் டெல்லி அணியும்  விளையாடி வருகின்றன. இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தினை புகைப்படம் எடுக்க, திருமணத்திற்கு சென்ற பட்டு வேட்டி சட்டையுடன் V.V. சுப்ரமணியம் என்ற புகைப்படக்காரர் வந்திருந்தார். இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "எனது நண்பருடைய மகனின் திருமணத்திலிருந்து உப்பல் மைதானத்திற்கு ரஞ்சி போட்டிக்காக வருகிறேன். வித்தியாசமான அனுபவமாக உள்ளது." என்று பதிவிட்டுள்ளார். ஏமாற்றமளித்த சானியா மிர்சா! ஆஸ்த...

ஈரோடு கிழக்கு: அண்ணாமலையை பதம்பார்க்கும் எடப்பாடி... சீமானின் புது உத்தி | Elangovan Explains

Doctor Vikatan: குழந்தைகளையும் பாதிக்குமா வெண்புள்ளி பிரச்னை?

Doctor Vikatan: என் தோழிக்கு வெண்புள்ளி பாதிப்பு இருக்கிறது. அவளின் பிள்ளைகளுக்கு இந்த பாதிப்பு இல்லை. ஆனாலும் பேரன், பேத்திகளுக்கு வந்துவிடுமோ என்று பயப்படுகிறாள். இன்னமும் அவளைப் பார்க்கும் பலரும் இந்த பாதிப்பு தொட்டால் ஒட்டிக்கொண்டு விடுமோ என சற்று விலகி நின்றே பேசுவதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. வெண்புள்ளி பாதிப்பு குழந்தைகளுக்கும் வருமா? இதை குணப்படுத்தவே முடியாதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா | சென்னை Doctor Vikatan: நாளுக்குநாள் அதிகரிக்கும் பொடுகுத் தொல்லை, முடி உதிர்வு... எளிய தீர்வுகள் உண்டா? விட்டிலிகோ அல்லது வெண்புள்ளி பாதிப்பு என்பது ஒருவகையான ஆட்டோஇம்யூன் குறைபாடு. அதாவது நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பாற்றலே நமக்கு எதிராக மாறுவது. அந்த வகையில் விட்டிலிகோ விஷயத்திலும், நம் உடலின் வெள்ளை அணுக்களே, சருமத்துக்கு நிறம் கொடுக்கும் நிறமிகளைச் சிதைத்துவிடுகிறது. நமது சருமத்துக்கு நிறம் கொடுக்கும் மெலனோசைட்ஸ் நிறமிகள் குறிப்பிட்ட இடத்தில் செயலிழந்திருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். விட்டிலிகோ பாதித்தவ...