ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் நிறுவனங்களின் பட்டியலில், தற்போது ஐ.பி.எம் நிறுவனமும் இணைந்திருக்கிறது. 3,900 ஊழியர்களை இந்த நிறுவனம் பணிநீக்கம் செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் நேற்றிரவு சரிவர இயங்காததால் பயனாளிகள் சிரமமடைந்தனர்.டொனால்ட் ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்பின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள்மீது விதிக்கப்பட்ட தடையைத் திரும்பப் பெறுவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஸ்பெயினில் மர்ம நபர் இரண்டு தேவாலயங்களின்மீது, தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
நேபாளத்தில் நடந்த விமான விபத்தின் கறுப்புப் பெட்டியை, சிங்கப்பூரில் ஆய்வு செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
உக்ரைனுக்கு 14 `லியோபார்ட் 2' ரக டாங்கிகளை ( Leopard 2 tanks) வழங்க ஜெர்மனி முடிவு செய்திருக்கிறது.மரணம்
பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 16 பேர் எரிவாயு கசிந்த விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர்.
ஜெர்மனியில் உள்ளூர் ரயிலில் கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
ஜப்பானில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவால், விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
வட கொரியா, தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் கடந்த ஆண்டு எல்லை ஒப்பந்தத்தை மீறியதாக ஐ.நா தெரிவித்திருக்கிறது.
http://dlvr.it/ShWSps
http://dlvr.it/ShWSps
Comments
Post a Comment