Skip to main content

மாணவியை சிறப்பு விருந்தினராக அழைத்து தேசியக்கொடி ஏற்றவைத்த பள்ளி நிர்வாகம்; பாராட்டுக்குரிய காரணம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், பந்தல் மண்டபம் அருகில் இயங்கி வருகிறது சரவணய்யர் நடுநிலைப்பள்ளி. கடந்த 1895-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிதான் திருச்செந்தூரில் தொடங்கப்பட்ட முதல் பள்ளி. இப்பள்ளியில் மொத்தம் 180 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். 11 ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிகிறார்கள். தேசியக்கொடி ஏற்றிய மாணவிபள்ளியில் தேசியக்கொடி ஏற்றிய `108 ஆம்புலன்ஸ்' பெண் ஊழியர்; நெகிழ்ச்சியான பின்னணி! பொதுவாக பள்ளிகளில் சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா என்றால் அந்தந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், தாளாளர், சுதந்திரப் போராட்ட தியாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர்களில் ஒருவர் தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம். ஆனால், இந்தப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் 8-ம் வகுப்பு படித்து முடித்த, தேசியத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, அல்லது இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவர்களை சிறப்பு விருந்தினராக பள்ளிக்கு அழைத்து தேசியக்கொடி ஏற்ற வைத்து மரியாதை செய்து வருகிறது இப்பள்ளியின் நிர்வாகம். இந்தாண்டு 74வது  குடியரசு தினவிழாவை முன்னிட்டு, கடந்த ஆண்டு இதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து, தேசியத் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ஹரிநாராயணி சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றினார். பள்ளியின் தாளாளர் ராமச்சந்திரனிடம் பேசினோம்...தேசியக்கொடி ஏற்றிய மாணவி ``ஒவ்வொரு வருஷமும் அரசு, தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது எளிதல்ல. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அரசு மாதம் ரூ.500 வீதம் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.24,000 உதவித் தொகையாக தருகிறது. எங்கள் பள்ளியில் இந்த தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் 54 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உதவித்தொகை பெற்றுள்ளனர். இளம் வயதில் சாதனை படைத்த மாணவர்களை வருடங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில்  சிறப்பு விருந்தினராக அழைத்து ஊக்கப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு தலைமைப்பண்பு வளர்வதுடன் சாதிக்கும் எண்ணமும் உருவாகிறது” என்றார்.  குடியரசு தின விழா நிகழ்ச்சிதிருச்செந்தூர்: 6-ம் வகுப்பு மாணவர் ஏற்றிய தேசியக்கொடி... காரணம் என்ன தெரியுமா?! கடந்த ஆண்டு தேசியத் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் சண்முகப்பிரியா, லோகப்ரியா, மதுமதி, மதிவதனி, வெங்கடேஸ்வரி ஆகிய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அறிவியல் கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் இரு இடம் பெற்ற முன்னாள் மாணவிகள் காவியா, துர்க்மெஸ்தான் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
http://dlvr.it/ShWT68

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...