Skip to main content

Posts

சேலம்: போஸ்டர் சர்ச்சை; சாதி குறித்த பேச்சு! - விசிக, பாமக மாறி... மாறி புகார் - என்ன நடந்தது?

சேலம், கொளத்தூர் காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் வசந்த் என்பவர் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ``கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி கொளத்தூர் காவேரிபுரம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு அந்தப் பகுதி பொறுப்பாளர்கள் சுவர் விளம்பரம் செய்தனர். அப்போது பா.ம.க-வைச் சேர்ந்த ராஜா, அவர் கூட்டாளிகள் சிலர் சுவரில் விளம்பரம் செய்யக்கூடாது என்று தகராறில் ஈடுப்பட்டனர். இது குறித்து வி.சி.க-வைச் சேர்ந்த இளையராஜா என்பவர் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சம்பந்தப்பட்ட ராஜா அவர் கூட்டாளிகள்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர் . மேலும் குற்றவாளிகளைக் கைதுசெய்யக்கூறி கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி மேட்டூர் பா.ம.க., எம்.எல்.ஏ., சதாசிவம் தலைமையிலான நிர்வாகிகள் கூட்டம் கொளத்தூரில் நடைப்பெற்றது. ``நானென்ன எதிர்க்கட்சி எம்.பி-யா?” - மாநகராட்சிக்கு எதிராக கொதித்த சேலம் திமுக எம்.பி; நடந்தது என்ன? அந்தக் கூட...

வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை; அதிர்ச்சி தந்த பாவெல்... சரிந்த பங்குச்சந்தை!

வாரத்தின் முதல் நாளான இன்று, பங்குச் சந்தைகள் கடும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. மும்பைப் பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், 800 புள்ளிகள் சரிவு கண்டுள்ளது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டெண்ணான நிஃப்டி 250 புள்ளிகள் வரை இறக்கம் கண்டுள்ளது. பெரும்பாலான துறை குறியீடுகளும் சரிவில் உள்ளன. குறிப்பாக ஐடி, ரியால்ட்டி, மெட்டல் மற்றும் பொதுத் துறை வங்கிகள் துறை குறியீடுகள், 2 முதல் 3 சதவிகிதம் வரை இறக்கத்தில் வர்த்தகமாயின. ஜெரோம் பாவெல் ஃபெடரல் வங்கி தலைவர் இந்தியப் பொருளாதார வளர்ச்சி இறங்கவே இறங்காது... புளூம்பர்க் ஆய்வு அடித்துச் சொல்வது உண்மையா? இதற்கு, அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பாவெல் கொடுத்த அதிர்ச்சிதான் காரணம். அமெரிக்காவில் பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பதால் அதைக் கட்டுக்குள் வைக்க வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதன் காரணமாக இனியும் வட்டி விகிதம் உயர்த்தப்படுவதற்குதான் அதிக வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார். வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் பொருளாதார நடவடிக்கைகள் தொய்வடையும் சாத்தியங்கள் உள்ளன. மக்களின் செலவுகள் அதிகரிக்கும், ...

``சாவர்க்கர் பறவையின்‌ இறக்கையில் தாய்நாடு வந்து செல்வார்" - கர்நாடக பாடநூல் சர்ச்சையும் விளக்கமும்

கர்நாடக மாநிலத்தின் எட்டாம் வகுப்பு கன்னட பாடப்புத்தகத்தில் உள்ள சில வரிகள் தற்போது சர்ச்சைக்குரிய விஷயமாக உருவெடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மாநில பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் சமீபத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது‌. இதில் எட்டாம் வகுப்புக்கான கன்னட பாடப்புத்தகத்தில் விநாயக் தாமோதர் சாவர்க்கர் பற்றிய புதிய பகுதி இணைக்கப்பட்டிருந்தது. விநாயக் தாமோதர் சாவர்க்கர் இந்துத்வ கொள்கைகளை முன்னிலைப்படுத்தியதில் முதன்மையானவரக அறியப்படுகிறார். புதிய பாடப்பகுதியில் இவரைப் பற்றி இடம்பெற்றிருக்கும் சில வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. `காலத்தை வென்றவர்கள்’ எனப் பெயரிடப்பட்ட அந்த குறிப்பிட்ட பாடப்பகுதி விநாயக் தாமோதர் சாவர்க்கர் யார் என்பதை மாணவர்களுக்கு விளக்கும் வகையில் அமைந்துள்ளது. 1911-ம் ஆண்டு முதல் 1924 ஆம் ஆண்டு வரை சாவர்க்கர் சிறையில் இருந்த போது அவருடைய வாழ்வு எவ்வாறு இருந்தது என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதில், `சிறையில் இருந்த சாவர்க்கர் ஒரு பறவையின் மீது ஏறி சிறையிலிருந்து தாய்நாடு வந்து செல்வார்’ எனக் எழுதப்பட்டுள்ளது. சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை...

IND v PAK: பலே பாண்டியா; பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா! அந்தச் சிக்கலான விதிமுறையைக் கவனித்தீர்களா?

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் ஆசியக்கோப்பை டி20 போட்டி நேற்று நடந்து முடிந்திருக்கிறது. இறுதிவரை பரபரப்பாகச் சென்ற இந்தப் போட்டியை இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இதன்மூலம் கடந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் வாங்கிய அடிக்குச் சரியான பதிலடியை இந்தியா கொடுத்திருக்கிறது. நேற்றையப் போட்டியின் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா ஒரு சிங்கிளைத் தவிர்த்திருப்பார். எதிர்முனையில் தினேஷ் கார்த்திக் கொஞ்சம் ஏமாற்றமுற, 'நான் பார்த்துக்குறேன்' என்பது போல ஹர்திக் பாண்டியா கண்ணசைத்திருப்பார். அதற்கடுத்த பந்தையே பெரிய சிக்ஸராக்கிச் சொன்னதை போலவே ஆட்டத்தையும் வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். சொல்லப்போனால் கடைசி ஓவரில் மட்டுமில்லை. நேற்றைய போட்டி முழுவதுமே 'ஒண்ணும் பிரச்சனையில்ல. நான் பார்த்துக்குறேன்' என்கிற மோடில்தான் ஹர்திக் பாண்டியா சுற்றித்திரிந்தார். பௌலிங்கில் முக்கியமான கட்டத்தில் முக்கியமான மூன்று விக்கெட்டுகள். பேட்டிங்கில் ஏறக்குறைய 200 ஸ்ட்ரைக் ரேட்டில் கடைசி ஓவர் ஃபினிஷிங். இதுபோக அவரின் வழக்கமான ஃபீல்டிங் மாயாஜாலங்கள் வேறு. எல்லாவிதத்...

Motivation Story: `நீ ஜெயிச்சுட்டே டெபி’ - சவாலை வென்று உலகப் புகழ்பெற்ற டெபி ஃபீல்ட்ஸ்!

`நல்ல உணவைச் சாப்பிடுவதற்கு வெள்ளி ஸ்பூன் தேவையில்லை!’ - பால் புருதாம் (Paul Prudhomme), பிரபல அமெரிக்க சமையற்கலைஞர். அம்மாவைப் பார்க்க வெகு தூரத்திலிருந்து அவருடைய தோழி வந்திருந்தார். வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மா, அவரின் இரு கைகளையும் பற்றி இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டார். இருவரும் வரவேற்பறையில் உட்கார்ந்து ``எப்படியிருக்கே?’’ என்கிற விசாரிப்போடு உரையாடலைத் தொடங்கினார்கள். பேச்சில் உலகையே மறந்துபோனார்கள். அவர்களையே சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்த டெபி அவர்களுக்கு அருகே வந்தாள். ``அம்மா... ஆன்ட்டிக்கு ஏதாவது சாப்பிடக் கொண்டு வரட்டுமா?’’ ``நீ ஏன் கண்ணு சிரமப்படுறே... அப்புறம் பார்த்துக்கலாம்’’ என்றார் தோழி. ``அட நீ வேற... வீட்டுக்கு யார் வந்தாலும் டெபி கையால சாப்பிடாமப் போக மாட்டாங்க. அது இந்த வீட்டுல ஒரு பழக்கம். நீ போ டெபி... ஆன்ட்டி பாராட்டுற மாதிரி ஏதாவது செஞ்சு எடுத்துக்கிட்டு வா...’’ துள்ளிக் குதித்து சமையலறைப் பக்கம் ஓடினாள் டெபி. அப்போது அந்தச் சிறுமிக்கு 14 வயது. பலருக்கும் சாப்பிடப் பிடிக்கும்; சமைக்கப் பிடிக்காது. சிலருக்கோ சமைக்கப் பிடிக்கும்; தான் சமைத்ததைப் பிற...

சி.பி.எம்: விலகிய கொடியேரி பாலகிருஷ்ணன்... கேரள மாநில செயலாளரானார் கோவிந்தன் மாஸ்டர் - யார் இவர்?

கேரள மாநிலத்தில் ஆளும் சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சி.பி.எம் கட்சியை பொறுத்தமட்டில் முதல்வர் பதவியை விட பவர்ஃபுல் பதவியாக மாநில செயலாளர் பதவி பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு மாநில செயலாளராக பினராயி விஜயன் முதல்வர் ஆனதைத் தொடர்ந்து கொடியேரி பாலகிருஷ்ணன் மாநில செயலாளர் ஆனார். எஸ்.எஃப்.ஐ மாநில செயலாளர், கண்ணூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் கொடியேரி பாலகிருஷ்ணன். பின்னர் தொடர்ச்சியாக மூன்று முறை சி.பி.எம் மாநில செயலாளராக இருந்துவந்தார். கொடியேரி பாலகிருஷ்ணனுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இடையில் மருத்துவ சிகிச்சைக்காக சில மாதங்கள் விடுப்பு எடுத்துச் சென்றிருந்தார் கொடியேரி பாலகிருஷ்ணன். எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் அப்போது ஏ.விஜயராகவன் பொறுப்பு மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் மீண்டும் மாநில செயலாளர் பதவியை சில மாதங்களுக்கு முன் ஏற்றுக்கொண்டார் கொடியேரி பாலகிருஷ்ணன். இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மாநில செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக கட்சி தலைமையிடம் கூறியுள்ளார் கொடியேரி பாலகிருஷ்ணன். இதையடுத...

Team India: `பைலேட்டரல் கோப்பைகள் நிச்சயம்; உலகக் கோப்பையே லட்சியம்' - இந்திய அணி செய்யவேண்டியதென்ன?

எந்தவொரு தொடரின் பின்னூட்டமும், அடுத்த தொடருக்கான உள்ளீடாகத் தரப்பட வேண்டியவை. அந்தப் படிப்பினைதான், தோல்வியையே சந்திக்காத அளவிற்கு ஒரு அணியை அடுத்தடுத்த தளங்களுக்கு ஆயத்தப்படுத்தும். அவ்வகையில், `பைலேட்டரல் கோப்பைகள் நிச்சயம், ஆனால், உலகக் கோப்பையே லட்சியம்' என்ற விசாலப் பார்வையோடு நகரும் இந்தியாவிற்கு, கடந்த மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே சுற்றுப் பயணங்கள், கற்றுத் தந்துள்ள பாடங்கள் என்னென்ன? Team India இத்தொடர்களின் முடிவுகளை பகுப்பாய்வு செய்தால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை, இந்தியா எளிதாகவே வென்றது. ஆனால், அந்த இரு நாடுகளுடனான ஒருநாள் தொடர்களில், ஒருசில போட்டிகளில், அந்த அணிகள் கடுமையான சவாலாக விளங்கின. அப்போட்டிகளில்தான், இந்தியாவின் குறைகள் ஆங்காங்கே தென்பட்டன. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் இரு போட்டிகளிலும் சரி, ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசிப் போட்டியிலும் சரி, சொற்ப ரன்கள் வித்தியாசத்திலோ, குறைவான பந்துகள் எஞ்சியிருக்கும் போதோதான், இந்தியாவிற்கு, வெற்றி வசப்பட்டது. இதற்கு பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமான குறைபாடுகளே காரணம். ஒவ்வொன்றாக...