Skip to main content

Paracetamol: குழந்தைகளுக்கான மருந்தில் கூடுதல் ஆல்கஹாலா? - பொது சுகாதாரத்துறை சொல்லும் விளக்கம்!

குழந்தைகளின் உடல்நல பாதிப்புகளுக்கு மருத்துவர்கள் பாராசிட்டமால் சிரப் வகைகளைப் பரிந்துரைப்பது வழக்கம். இந்த பாராசிட்டமால் மருந்தில் அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் கலந்திருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. இந்த நிலையில், பொது சுகாதாரத்துறை வதந்திகளுக்கு விளக்கமளித்திருக்கிறது. அதன்படி, `'பாராசிட்டமால் சிரப் மருந்து தமிழ்நாடு மருத்துவப் சேவை கழகத்தின் (டி.என்.எம்.எஸ்.சி.) அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தால் பரிசோதிக்கப்பட்டு தரமானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு ஆய்வகமும் இதனை தரமானது என்று சான்றளித்துள்ளது. குழந்தைகளுக்கான மருந்துகளில் ஆல்கஹால் சரியான விகிதத்திலேயே பயன்படுத்தப்படுகிறது. 'பாராசிட்டமால்' மருந்தை எளிதில் கரைக்க ஆல்கஹால் பயன்படுத்துவது வழக்கம்.

syrup
syrup

இந்த ஆல்கஹாலின் அளவு 10 சதவீதம் என்ற வரம்புக்குள்தான் இருக்கும். உதாரணத்திற்கு, 60 மி.லி. அளவு கொண்ட மருந்து பாட்டிலில் 10 சதவீதம் அதாவது 6 மி.லி. அளவிலேயே ஆல்கஹால் பயன்பாடு இருக்கும். '95 சதவீதம் ஆல்கஹால்' என்பது ஆல்கஹாலின் தூய தன்மையை குறிப்பிடும் சொல் மட்டுமே. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் கிடங்குகளில் அனைத்து மருந்துகளும் 180 நாட்களுக்கு ஒருமுறை வழக்கமான மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இது தவிர அரசு மருத்துவ நிறுவனங்களில் உள்ள மருந்துகளும் தரத்தை உறுதி செய்ய அவ்வப்போது கள ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. தரமான மருந்து என்று உறுதி செய்யப்பட்ட பிறகே இந்த மருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வினியோகிக்கப்படுகின்றன. எனவே, மக்களிடையே தவறான தகவலை பரப்ப வேண்டாம்." எனக் கூறப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...