Skip to main content

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள், பருமனானவர்கள் மாம்பழம் சாப்பிடவே கூடாதா?

Doctor Vikatan: என் வயது 65. சர்க்கரை நோய் இருக்கிறது. உடல் பருமனும் உள்ளது. இந்நிலையில் மாம்பழ சீசனில் மாம்பழம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டால் என் குடும்பத்தார் மறுக்கிறார்கள். எடை கூடும், சர்க்கரை நோய் தீவிரமாகும் என்று தடுக்கிறார்கள். சர்க்கரை நோயாளிகளும், உடல் எடை அதிகமுள்ளோரும் மாம்பழம் சாப்பிடவே கூடாதா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன். 

உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன்
உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன்

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடுமோ, ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்துவிடுமோ  என்ற கவலை உங்களைப் போல பலருக்கும் இருக்கும் இயல்பான சந்தேகம்தான். மாம்பழத்தைச் சரியான முறையில் சாப்பிட்டால், ரத்தச் சர்க்கரை அளவை (blood sugar) கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம், எடையும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

அளவைக் கட்டுப்படுத்துவதுதான் இதில் முக்கியம். அதாவது மாம்பழத்தின் அளவு 150 கிராமைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நறுக்கிய மாம்பழமாக இருந்தால் ஒரு கப் அளவைத் தாண்ட வேண்டாம். குளுக்கோஸ் உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்க, மாம்பழத்துடன் ஒரு டீஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய் (virgin coconut oil) அல்லது நெய் சேர்த்துச் சாப்பிடலாம்.

மாம்பழத்தை ஜூஸாகக் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். எந்தப் பழத்தையும் ஜூஸாகக் குடிப்பதைவிட, முழுப் பழமாகச் சாப்பிடுவதே சிறந்தது. பழத்தில்தான் நார்ச்சத்து (fiber) நிறைந்துள்ளது. மாம்பழம் சாப்பிட்ட பிறகு, உங்களுக்கு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரைக் கலந்து குடிக்கலாம். உங்களுக்கு அசிடிட்டி, வயிற்றுப் புண் (ulcers) இருந்தாலோ அல்லது மருத்துவர் வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தாலோ இதைத் தவிர்க்கவும்.

ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகர்

சாப்பிட்ட பிறகு 5 முதல் 10 நிமிடங்கள் நடப்பது, உங்கள் உடல், குளுக்கோஸைத் திறம்பட பயன்படுத்த உதவும். மாம்பழத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் நட்ஸ் அல்லது 2 முதல் 3 சிறிய துண்டுகள் தேங்காயைப் பச்சையாகச் சேர்த்துச் சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு நல்ல கொழுப்புகள் கிடைப்பதுடன் வயிறும் நிறைந்திருக்கும்.

மாம்பழம் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும், சில பிரச்னைகள் இருப்பவர்கள் அதை எடுத்துக்கொள்வதில் கூடுதல் கவனம் தேவை.
சரியாகக் கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய் (Diabetes) அல்லது தொடர்ந்து ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் மாம்பழத்தைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பகால நீரிழிவு நோய் (Gestational diabetes) உள்ளவர்கள்  மருத்துவரின் அனுமதிபெற்றே அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பொட்டாசியம் அளவைக் குறைக்க அறிவுறுத்தப்பட்டவர்கள், நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic kidney disease) உள்ளவர்கள், மாம்பழம், அதன் தோல் அல்லது அதன் பால் ஆகியவற்றால் ஒவ்வாமை (Allergy) ஏற்பட வாய்ப்புள்ளவர்கள், கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் ஆகியோரும்  கவனமாக இருக்க வேண்டும்.

மாம்பழம் மட்டுமே உடல் எடை அதிகரிப்பதற்குக் காரணம் அல்ல.

மாம்பழம் மட்டுமே உடல் எடை அதிகரிப்பதற்குக் காரணம் அல்ல. எடை அதிகரிக்கவும் ரத்தச் சர்க்கரை அதிகரிக்கவும் உங்களது ஒட்டுமொத்த உணவுமுறை, சாப்பிடும் அளவு, உடற்பயிற்சி மற்றும் உங்களது வாழ்க்கைமுறை ஆகியவையே மிக முக்கியக் காரணங்கள் என்பதை உணர்ந்து அதற்கேற்ப வாழ்வியலை, உணவியலை முறைப்படுத்திக் கொள்ளவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...