Skip to main content

Doctor Vikatan: பிபி (BP) நார்மல்... ஆனாலும், அடிக்கடி தலைச்சுற்றல்... காரணம் என்ன?

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி தலைச்சுற்றல் (Giddiness) ஏற்படுகிறது, ஆனால், ரத்த அழுத்தம் (BP) சரியாகத்தான் இருக்கிறது. இதற்கு வேறு என்ன காரணமாக இருக்கும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் சிகிச்சை மருத்துவர் வி.எல். அருள்செல்வன்

நரம்பியல் சிகிச்சை மருத்துவர் வி.எல். அருள்செல்வன்
நரம்பியல் சிகிச்சை மருத்துவர் வி.எல். அருள்செல்வன்

தலைச்சுற்றல் ஏற்பட பிபி அளவைத்தாண்டி வேறு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். நம்முடைய பேலன்ஸ் சிஸ்டம் (Balance system), மூளைத்தண்டில் (Brain stem) ஆரம்பித்து உள் காதில் (Inner ear) உள்ள பேலன்ஸ் உறுப்பு வரை இருக்கும். இதில் எங்கு பிரச்னை வந்தாலும் நமக்குத் தலைச்சுற்றல் வரலாம்.

உள் காதில் இருக்கக்கூடிய முக்கியமான பிரச்னைகளில், பிபிபிவி (Benign Paroxysmal Positional Vertigo) எனப்படுவது மிக முக்கியமான காரணம். இந்தப் பிரச்னை பாதித்தால் படுக்கும்போதோ, எழுந்திருக்கும்போதோ தலைச்சுற்றல் வரும். ஆனால், அது ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்காது. விட்டுவிட்டு வந்துகொண்டே இருக்கும்.

அடுத்தது வெஸ்டிபுலார் நியூரோனைட்டிஸ் (Vestibular neuronitis) என்ற பிரச்னையால் ஏற்படும் தலைச்சுற்றல். அந்த பேலன்ஸ் நரம்பில் வீக்கம் அல்லது அழற்சி (Inflammation ) ஏற்பட்டு, அதனால் தலைச்சுற்றல் ஏற்படும். மற்றபடி, மூளைக்குப்போகும் ரத்த ஓட்டப் பிரச்னையாலும் தலைச்சுற்றல் வரலாம்.

தலைவலிகளுக்கான வீட்டுத் தீர்வுகள்..!
மைக்ரேன் (Migraine) எனப்படும் ஒற்றைத் தலைவலி பிரச்னை உள்ள பலருக்கு அடிக்கடி தலைச்சுற்றல் வரும்.

மைக்ரேன் (Migraine) எனப்படும் ஒற்றைத் தலைவலி பிரச்னை உள்ள பலருக்கு அடிக்கடி தலைச்சுற்றல் வரும். எனவே, நீங்கள் ஒரு மருத்துவரிடம் சென்று, உங்களுடைய பிரச்னையின் தீவிரம், உடல்நலம் குறித்த பின்னணித் தகவல்கள் ஆகியவற்றைச் சொல்லி ஆலோசனை பெற வேண்டும்.

அதாவது, தலைச்சுற்றல், உங்களுக்கு எப்படி ஆரம்பிக்கிறது, எவ்வளவு நேரம் இருக்கிறது, எத்தனை முறை வருகிறது, அத்துடன் வேறு அறிகுறிகள் இருக்கின்றனவா என்று மருத்துவரிடம் விளக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, காது கேட்பதில் பிரச்னை, காதில் 'கொய்ங்' என்று சத்தம் கேட்பது, வாந்தி, நடப்பதில் பிரச்னை, கண்ணில் பிரச்னை போன்றவை. இவை எல்லாவற்றையும் வைத்து என்ன காரணம் என்று கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சையை மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரைப்பார். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...