Skip to main content

Doctor Vikatan: 3 வயதுக் குழந்தைக்கு மாறுகண்... தானாக சரியாகுமா, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் 3 வயதுக் குழந்தைக்குத் திடீரென இடது கண் மட்டும் லேசாக மாறுகண்ணாக (Squint eye) மாறுகிறது. இந்தப் பிரச்னை வளர வளர தானாகவே சரியாகிவிடுமா அல்லது டாக்டரிடம் காட்ட வேண்டுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

கண் மருத்துவர் விஜய் ஷங்கர்
கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

3 வயது குழந்தைக்குத் திடீரென ஒரு கண் மட்டும் லேசாக மாறுகண்ணாக (Squint) மாறினால், உடனடியாக கண் மருத்துவரிடம் (Ophthalmologist) அழைத்துச் சென்று காட்ட வேண்டும். கண் மருத்துவர், குழந்தையைப் பரிசோதித்துவிட்டு, ஏதேனும் பவர் குறைபாடு (Refractive Error) உள்ளதா என்று பார்ப்பார்.

கண் பரிசோதனையில், குழந்தைக்கு மயோபியா (Myopia) எனப்படும் கிட்டப்பார்வையோ, ஹைப்பர்மெட்ரோபியா  (Hypermetropia) எனப்படும்  தூரப்பார்வையோ  அல்லது  சிதறல் பார்வையோ  (Astigmatism ) இருக்கின்றனவா என்று பார்ப்பார்.

அப்படி  ஏதேனும் பார்வைக் குறைபாடு கண்டறியப்பட்டால், அதற்கேற்ற பொருத்தமான கண்ணாடியைப் (Appropriate Glasses) பயன்படுத்த  அறிவுறுத்துவார். 

மாறுகண்ணோடு தொடர்புடைய மற்றொரு முக்கியமான விஷயம்  'ஆம்பிலியோபியா' (Amblyopia ) ஆகும். இதை 'சோம்பேறிக் கண்' (Lazy Eye) என்றும் சொல்வோம். இந்தக் குறைபாடு உள்ள கண்ணில் பார்வைத் திறன் குறைவாக இருக்கும். எனவே,  மாறுகண்ணோடு ஆம்பிலியோபியா குறைபாடும் இருந்தால் அதையும் சரி செய்ய வேண்டும். 

ஒருவேளை கண்ணாடி அணிந்த பிறகும் மாறுகண் குறைபாடு சரியாகவில்லை என்றால், அதற்கு அடுத்தபடியாக அறுவை சிகிச்சை (Surgery) பரிந்துரைக்கப்படலாம்.

இதற்கு ஆக்லுஷன் தெரபி (Occlusion Therapy) என்ற சிகிச்சை உதவும்.  இதில் பொதுவாக பார்வை நன்றாக உள்ள  கண்ணை மூடி, பார்வை குறைவாக உள்ள பலவீனமான கண்ணை (Weak Eye) தூண்டும்படி செய்வார்கள். இதன் மூலம் குழந்தை,  பலவீனமான கண்ணைக்கொண்டு நன்றாகப் பார்ப்பதை உறுதி செய்ய முடியும். இந்தச் சிகிச்சையோடு, கண்களுக்கான பயிற்சிகளும் (Orthoptic Exercises) வழங்கப்படும்.

எனவே, உங்கள் குழந்தை விஷயத்தில், முதலில்  பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்து, கண்ணை வலுப்படுத்துவதோடு பார்வைத்திறனை 6/6 என்ற அளவிற்குக் கொண்டு வர வேண்டும். ஒருவேளை கண்ணாடி அணிந்த பிறகும் மாறுகண் குறைபாடு சரியாகவில்லை என்றால், அதற்கு அடுத்தபடியாக அறுவை சிகிச்சை (Surgery) பரிந்துரைக்கப்படலாம். அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் மாறுகண் குறைபாட்டை முற்றிலும் சரிசெய்துவிடலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...