Skip to main content

Doctor Vikatan: 10 வயது மகனுக்கு தேர்வு நெருங்கினால் வயிற்றுப்போக்கு... தானாகச் சரியாகுமா?

Doctor Vikatan: என் மகனுக்கு 10 வயதாகிறது.  பள்ளிக்கூடத்தில் தேர்வு நெருங்கினாலே அவனுக்கு வயிற்றுப்போக்கு ஆரம்பித்து விடுகிறது. பயத்தினால் இப்படி ஆகுமா... இதற்கு என்ன  செய்வது, தானாகச் சரியாகுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவர் சுதீப்தா குமார் ஸ்வெயின்

குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவர் சுதீப்தா குமார் ஸ்வெயின்
குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவர் சுதீப்தா குமார் ஸ்வெயின்

தேர்வு நெருங்கும் காலங்களில் வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று உப்புசம் (bloating) போன்ற பிரச்னைகள் ஏற்படுவது அசாதாரணம் அல்ல. மூளையில் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக குடலில் வெளிப்படும் ஒரு வகையான அறிகுறிதான் இது.

இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய நாம் போதிய அளவு தூங்க வேண்டும். மற்ற செயல்பாடுகளைக் குறைத்துக் கொண்டாலும், தூங்கும் நேரத்தைக் குறைக்கக் கூடாது. தேர்வு நேரத்திலும் படித்துக்கொண்டே கூடுதல் கவனம் செலுத்தினாலும், ஒரு நாளைக்கு 7 மணி நேரமாவது தூங்குவது மிகவும் அவசியமாகும். உங்கள் மகன் போதுமான அளவு தூங்குகிறானா என்பதைக் கண்காணித்து, அதற்கு வழி செய்யுங்கள்.

எளிமையான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இக்காலகட்டத்தில் பால் பொருள்கள் மற்றும் பீன்ஸ் போன்ற உணவு வகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். 

தேர்வு நேரத்தில் படிக்க வேண்டியது முக்கியம்தான் என்றாலும், அவ்வப்போது இடைவெளி எடுக்க வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு சில உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

தேர்வு நேரத்தில் படிக்க வேண்டியது முக்கியம்தான் என்றாலும், அவ்வப்போது இடைவெளி எடுக்க வேண்டும்.

தேவைப்பட்டால், குடல் எரிச்சலைக் குறைக்கவும் மூளையை அமைதிப்படுத்தவும் மருந்துகளை உட்கொள்ளலாம். ஆனால், கடைகளில் நேரடியாகக் கிடைக்கும் (Over the counter) மருந்துகளைத் தவிர்த்து, குடல் நோய் மருத்துவரை (Gastroenterologist) அணுகி ஆலோசனை பெற்றே மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேர்வு போன்ற மன அழுத்த காலங்களில் மேற்கொள்ள வேண்டிய வாழ்வியல் மாற்றங்கள் குறித்த ஆலோசனைகளையும் மருத்துவர் உங்கள் மகனுக்குச் சொல்வார்.

'மூளை-குடல் அச்சு' (Brain-gut axis) என்ற செயல்பாட்டின் காரணமாகத்தான் இந்தப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இதைக் குணப்படுத்த வாழ்வியல் மாற்றங்கள், உணவு முறை மாற்றங்கள் ஆகிய இரண்டையும் நாம் பின்பற்ற வேண்டும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...