Skip to main content

Doctor Vikatan: இரும்பில் செய்த மீன் பொம்மை... சமையலில் சேர்த்தால் ரத்தச்சோகை சரியாகுமா?

Doctor Vikatan: சமீபகாலமாக இரும்பில் செய்யப்பட்ட மீன் பொம்மைகளைச் சமைக்கும் பாத்திரத்தில் போட்டுக் கொதிக்க வைக்கும்படியும், அதனால் உணவில் இரும்புச்சத்து அதிகரிக்கும் என்றும் சொல்லி சோஷியல் மீடியாவில் விளம்பரம் செய்கிறார்கள்.

இது எந்த அளவுக்கு உண்மை... இரும்புப் பாத்திரத்தில் சமைப்பதால் உணவில் இரும்புச் சத்து (Iron) அதிகரிப்பது உண்மையா?

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம்.

கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர்
கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர்

இரும்புப் பாத்திரத்தில் சமைப்பது என்பது உணவில் இரும்புச்சத்து ஓரளவு அதிகரிக்க உதவும். ஆனால், இரும்புச்சத்துக் குறைபாட்டுக்கான முழுமையான தீர்வாக நிச்சயம் அது இருக்காது.

நீங்கள் குறிப்பிட்டுள்ள இரும்பு மீன் பொம்மையைச் சமைக்கும்போது பயன்படுத்தலாம். இரும்புச்சத்து கிடைக்க ஓரளவு உதவும். ஆனால், இதை மிகவும் சுத்தமாக, சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும். துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். துருப் பிடித்தால் பயன்படுத்தக்கூடாது.

இரும்புச்சத்துக் குறைபாட்டுக்கான சரியான காரணத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப சிகிச்சையையும் இரும்புச்சத்துள்ள உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இரும்புச்சத்துள்ள உணவுகள் என்று வரும்போது சிக்கன், மட்டன், மீன், ஈரல், முட்டை போன்றவற்றைச் சாப்பிடுவது பலன் தரும். 

தாவர உணவுகளில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்தை 'நான்ஹீம்' அயர்ன் (Non-Heme Iron) என்று சொல்வோம். இவற்றிலிருந்து உடலுக்குக் கிடைக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைவாகவே இருக்கும். ஆனாலும், இவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். 

கொள்ளு, கொண்டைக்கடலை, ராஜ்மா, பச்சைப் பயறு, சோயா பீன்ஸ், டோஃபு, கீன்வா, எள், நட்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

முருங்கைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, அகத்திக்கீரை போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வது இரும்புச்சத்துக் குறைபாட்டைச் சரி செய்ய உதவும். பாரம்பர்ய உணவுகளான கறுப்பு உளுந்து லட்டு, எள்ளுப் பொடி, கொள்ளுச் சட்னி, முளைக்கட்டிய பயறு வகைகள், முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துச் செய்த ராகி அடை,  கறிவேப்பிலைப் பொடி போன்றவற்றையும் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். 

காபி, டீ அதிகம் குடிப்பவராக இருந்தாலோ, இரும்புச்சத்து மாத்திரைகளோடு, கால்சியம் மாத்திரைகளையும் சேர்த்து எடுத்துக்கொண்டாலோ இரும்புச்சத்து உட்கிரகிக்கப்படுவது தடைப்படலாம்.

இரும்புச்சத்து உடலில் சரியாக உட்கிரகிக்கப்பட வேண்டும் என்றால், அத்துடன் வைட்டமின் சி சத்தும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். கீரை சாப்பிடும்போது அதில் எலுமிச்சைப்பழச்சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

முளைக்கட்டிய சாலட் சாப்பிடும்போது அத்துடன் நெல்லிக்காய், எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்துக் கொள்ளலாம். குடமிளகாய் சட்னி, நெல்லிக்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவற்றைச் சாப்பிடலாம்.

பழங்களில் கொய்யாப்பழம், கிவி போன்றவை சிறந்த சாய்ஸ். உணவுப் பொருள்களை ஊறவைப்பது, முளைக்கட்டச் செய்வது, புளிக்க வைப்பது, இரும்புப் பாத்திரத்தில் சமைப்பது என எல்லாமே இரும்புச்சத்துக் குறைபாட்டைச் சரி செய்ய உதவும்.

ஆனால், இவை எல்லாவற்றையும் செய்துவிட்டு, நீங்கள் காபி, டீ அதிகம் குடிப்பவராக இருந்தாலோ, இரும்புச்சத்து மாத்திரைகளோடு, கால்சியம் மாத்திரைகளையும் சேர்த்து எடுத்துக்கொண்டாலோ இரும்புச்சத்து உட்கிரகிக்கப்படுவது தடைப்படலாம்.

அதேபோல அளவுக்கதிகமான நார்ச்சத்து கொண்ட உணவுப்பழக்கமும் தவிர்க்கப்பட வேண்டும். உதாரணத்துக்கு, கீரை. அதை அளவோடு எடுத்துக்கொண்டால் பிரச்னையில்லை. அளவுக்கதிகமாக எடுக்கும்போது இதிலுள்ள ஃபைட்டேட், இரும்புச்சத்து உட்கிரகிப்பைத் தடுக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...