Skip to main content

Doctor Vikatan: அசைவம் சாப்பிடாமலும் அதிகரிக்கும் கொழுப்பு... குறைப்பது சாத்தியமா?

Doctor Vikatan: நான் அசைவ உணவுகளே சாப்பிடுவதில்லை.  ஆனாலும் எப்போது பிளட் டெஸ்ட் செய்தாலும் எனக்கு கொழுப்பு (Cholesterol) அதிகமாக இருப்பதாகவே  ரிப்போர்ட்டில் வருகிறது. இதற்கு என்ன காரணம்...  அதிகப்படியான கொழுப்பை எப்படிக் குறைப்பது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர்

கொழுப்பு அதிகமாக இருப்பதற்கு அசைவ உணவுப் பழக்கம்தான் காரணமாக இருக்கும் என அர்த்தமில்லை. சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கும் கொழுப்பு அதிகமாக இருக்கலாம்.  ரத்தத்தில் உள்ள கொழுப்பில் சுமார் 80% நமது கல்லீரலால் (Liver) சுயமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 20% மட்டுமே நாம் சாப்பிடும் உணவிலிருந்து வருகிறது. உங்கள் மரபணு அல்லது பரம்பரையில் (Genetics) யாருக்கேனும் அதிக கொழுப்பு பிரச்னை இருந்தால்,  உங்கள் கல்லீரல் இயற்கையாகவே அதிக கொழுப்பை உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது 

நம் உடலுக்குத் தேவைக்கு அதிகமான ஆற்றல் கிடைக்கும்போது, உடல் அதை வீணாக்க விரும்பாது. உடல், அதைக் கொழுப்பாகச் சேமித்து வைத்துக்கொள்ளும். அதன் தொடர்ச்சியாக ரத்தத்திலும் கொழுப்பு அதிகமாகக் காட்டும். சைவ உணவுக்காரர்களும் கொழுப்புச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடும்பட்சத்தில் அவர்களுக்கும் பிரச்னைகள் வரவே செய்யும். நெய், எண்ணெய் உணவுகள், இனிப்புகள் போன்றவற்றைச் சாப்பிடும்போது கொழுப்பு அதிகரிக்கும்.

பிஸ்கட், பப்ஸ், கேக் உள்ளிட்ட  பேக்கரி உணவுகள், சிப்ஸ், சமோசா மற்றும் எண்ணெயில் பலமுறை பொரித்த உணவுகளில் 'டிரான்ஸ் ஃபேட்' (Trans fat) அதிகமிருக்கும். இது அசைவ உணவுகளை விட மிக வேகமாக உடலில் கெட்ட கொழுப்பை ஏற்றும் தன்மையுடையது.  உடல் உழைப்பு குறைந்து, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது நல்ல கொழுப்பைக் (HDL) குறைத்து, கெட்ட கொழுப்பை (LDL) அதிகரிக்கச் செய்யும்.  நாள்பட்ட மன அழுத்தம் (Stress) உடலில் கார்டிசால் (Cortisol) ஹார்மோனைத் தூண்டி, கொழுப்பு உற்பத்தியை அதிகரிக்கும். போதிய தூக்கமின்மையும் கொழுப்பு அளவை பாதிக்கும்.

உடற்பயிற்சி

சைவமோ, அசைவமோ... எந்த உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கும் தினசரி உடற்பயிற்சி மிக முக்கியம்.  அதன் மூலம் கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் வரும். இதைத் தாண்டி, சிலருக்கு மரபியல் ரீதியாகவும் கொழுப்பு அதிகமாக இருக்கும் வாய்ப்புகள் உண்டு. நீரிழிவு பாதிக்கும்போது கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.  ஸ்ட்ரெஸ் அதிகமானால்கூட கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கலாம்.

எனவே, உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி இரண்டுமே இந்த விஷயத்தில் முக்கியம். டெஸ்ட் ரிப்போர்ட்டை மருத்துவரிடம் காட்டி, தேவைப்பட்டால் தற்காலிகமாக மருந்துகள் எடுத்துக்கொண்டு, கொழுப்பைக் குறைக்க முயற்சி செய்யலாம். அதன் பிறகு உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் சரியான அளவைத் தக்க வைக்கலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...