Skip to main content

Doctor Vikatan: எப்போதும் மனதில் நெகட்டிவ் எண்ணங்கள்; விரட்டவும் விடுபடவும் தீர்வுகள் உண்டா?

Doctor Vikatan: எப்போதும் எதிர்மறை எண்ணங்கள் மனதை ஆக்கிரமிக்கின்றன. அதிலிருந்து விடுபட எவ்வளவு முயற்சி செய்தாலும் முடியவில்லை. இதனால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இதற்குத் தீர்வுதான் என்ன?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் மிதுன் பிரசாத்

மனநல மருத்துவர் மிதுன் பிரசாத்
மனநல மருத்துவர் மிதுன் பிரசாத்

தேவையற்ற அல்லது எதிர்மறையான எண்ணங்கள் அதிகமாகத் தோன்றினால், அது 'ஓசிடி' எனப்படும் 'அப்சசிவ் கல்பல்சிவ் டிஸ்ஆர்டர்' ( Obsessive-Compulsive Disorder) போன்ற ஏதேனும் ஒரு பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். அதாவது, நாம் எந்தவொரு விஷயத்தைப் பற்றி நினைக்கக்கூடாது அல்லது யோசிக்கக்கூடாது என்று கருதுகிறோமோ, அந்த விஷயம் நம் கட்டுப்பாட்டையும் மீறி மீண்டும் மீண்டும் நம் மனதிற்குள் வந்துகொண்டே இருப்பதைத்தான் நாம் விரும்பாத, நம்மை பயமுறுத்தும் எண்ணங்கள் (Intrusive Thoughts) என்கிறோம்.

உங்களுக்குத் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் (Negative thoughts) இதன் அறிகுறியாகவும் இருக்கலாம். 'நாம் ஏன் உண்மையில் உயிரோடு இருக்கிறோம்?', 'நாம் ஏன் இந்த வாழ்க்கையை வாழ வேண்டும்?', 'நாம் ஏன் இது போன்ற சூழ்நிலைகளையெல்லாம் எதிர்கொள்ள வேண்டும்?' என்பன போன்ற எதிர்மறையான சிந்தனைகள் தோன்றலாம்.

இந்த இரண்டு நிலைகளுக்குமே முறையான சிகிச்சைகள் உள்ளன. இந்தப் பாதிப்புகளின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும். தங்களுக்கு இருக்கும் பாதிப்பு மிகவும் லேசானதாக இருந்தால், வெறும் மனநல ஆலோசனையே (Counseling) போதுமானது.

ஒருவேளை, அந்த எண்ணங்கள் அடிக்கடி தோன்றி, அன்றாட வேலைகளில் உங்களால் கவனம் செலுத்த முடியாமலோ அல்லது தினசரி  வேலைகளைச் செய்ய விடாமல் தடுத்தாலோ, அதற்கென பிரத்யேக மாத்திரைகள் உள்ளன. மருத்துவர் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட கால அளவிற்கு (சில மாதங்கள் மட்டும்) அந்த மருந்துகளை எடுத்துக்கொண்டு, பின்னர் அதனை முழுமையாக நிறுத்திக் கொள்ளலாம்.

எதிர்மறை எண்ணங்கள் அழுத்தும்போது, அவற்றிலிருந்து விடுபட சில விஷயங்களைச் செய்யலாம்.  மூச்சுப் பயிற்சி  செய்யலாம்.

6 விநாடிகள் மூச்சை மிகவும் மெதுவாக உள்ளே இழுக்க வேண்டும். இழுத்த மூச்சை 4 விநாடிகள் அப்படியே உள்ளே நிறுத்தி வைக்க வேண்டும். 8 விநாடிகளுக்கு மூச்சை மெதுவாக வெளியே விட வேண்டும்.

அதாவது, சாதாரணமாக அமர்ந்து கொண்டு, கைகளைப் பக்கவாட்டில் வைத்து, கண்களை மூடிக்கொள்ள வேண்டும். 6 விநாடிகள் மூச்சை மிகவும் மெதுவாக உள்ளே இழுக்க வேண்டும்.  இழுத்த மூச்சை 4 விநாடிகள்  அப்படியே உள்ளே நிறுத்தி வைக்க வேண்டும். 8 விநாடிகளுக்கு மூச்சை மெதுவாக வெளியே விட வேண்டும்.

6-4-8 என்ற இந்த வரிசையை உங்களால் எவ்வளவு மெதுவாகச் செய்ய முடியுமோ, அவ்வளவு மெதுவாகச் செய்ய வேண்டும். இதே முறையில் தொடர்ந்து 5 முறை இந்தப் பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.

காலையில் தூங்கி எழுந்தவுடன், வெறும் வயிற்றில் இந்த 'பாக்ஸ் ப்ரீதிங்' (Box Breathing) சுவாசப் பயிற்சியைச் செய்யலாம். (அதாவது 6 விநாடிகள் மூச்சை உள்ளே இழுப்பது, 4 விநாடிகள் அடக்குவது, 8 விநாடிகள் வெளியே விடுவது என இதனை ஐந்து முறை செய்ய வேண்டும்).
மனதில் தேவையில்லாத எண்ணங்கள் தோன்றினால், 'அவை வரட்டும், வந்துவிட்டுப் போகட்டும்' என்று எவ்வித அழுத்தமும் இன்றி, மனதை ஃப்ரீயாக  விட்டுப் பழகுங்கள். அதற்கு முக்கியத்துவம் கொடுக்காத பட்சத்தில் அதனால் உங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...