Skip to main content

Doctor Vikatan: பிரசவித்த பெண்களுக்கு பத்திய உணவு... ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தாதா?

Doctor Vikatan: பிரசவத்திற்குப் பிறகு கிராமங்களிலும் நகரங்களில் சிலரும் பெண்களுக்கு பத்தியச் சாப்பாடு கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

பத்தியச் சாப்பாடு கொடுப்பது பிரசவித்த பெண்களுக்கு உண்மையிலேயே  ஆரோக்கியமானதா அல்லது அது ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்துமா?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்
சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு பத்திய உணவு கொடுப்பது என்பது நம்மிடையே நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு பழக்கம்தான். ஆனால், பொதுமக்களிடையே 'பத்தியம்' என்றாலே அது சத்துகள் குறைந்த அல்லது மிகக் குறைவாகச் சாப்பிடக்கூடிய உணவு என்ற தவறான கருத்து பரவலாக உள்ளது.

உண்மையில், பிரசவத்திற்குப் பிந்தைய உணவியல் என்பது தாயின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. ஒவ்வொரு பருவ வயதினருக்கும் தனித்தனி உணவியல் இருப்பது போல, பிரசவித்த பெண்களுக்கும் பிரத்யேக உணவியல் உள்ளது.

சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை, பிரசவித்த பெண்களுக்குப் பல வகையான லேகியங்கள் (உதாரணத்துக்கு,  பிரசவ லேகியம்) பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த லேகியங்கள்  கர்ப்பப்பையின் நிலையை விரைவாகப் பழையபடி சுருக்குவதற்கு உதவுகின்றன.

பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பப்பையில் தங்கியுள்ள கழிவுகள் அனைத்தும் முழுமையாக வெளியேறப் பயன்படுகின்றன. பிரசவத்தின்போது ஏற்படும் அதிகப்படியான ரத்த இழப்பு மற்றும் உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு மீண்டும் ஊட்டமளிக்கின்றன.

கிராமப்புறங்களில் பிரசவித்த பெண்களுக்கு ஊட்டக்கஞ்சி கொடுக்கும் வழக்கம் உள்ளது. இதற்கான குறிப்புகள் சித்த மருத்துவத்திலும் காணப்படுகின்றன. இதில் பருப்பின் சாரங்கள் பிரதானமாக இருப்பதால், இந்தக் கஞ்சி புரதச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.  

செரிமான மண்டலத்திற்கு எந்தவித கடினமான வேலையையும் தராமல், மிக எளிதாகச் செரிமானமடையும் தன்மையைக் கொண்டது. கடினமான உணவுகள் உடலுக்கு மிக மெதுவாகவே ஆற்றலைத் தரும். ஆனால், இந்தக் கஞ்சி வகைகள் தேவையான ஆற்றலை உடனடியாக திசுக்களுக்கு வழங்கி உடம்பைத் தேற்றுகின்றன.

தாய்ப்பால்
தாய்ப்பால் I சித்திரிப்பு படம்

பத்தியக் கஞ்சியில் மிளகு சேர்த்துச் செய்வார்கள். பிரசவத்திற்குப் பின் உடல் சற்று குளிர்ந்து (சில்லென்று) இருக்கும் என்பதால், மிளகு சேர்ப்பது உடலுக்குத் தேவையான மிதமான வெப்பத்தைத் தரும்.

பிரசவித்த பெண்களுக்குக் கொடுக்கப்படும் உணவுகளில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய நெய் - பருப்பு சாதம் போன்ற உணவுகளும் அடங்கும்.

பத்திய உணவுகள் தாயின் உடல்நிலையைச் சீராக்குவதுடன், குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் உதவுகின்றன. இதற்காகத்தான் பால் சுறா மீன், கருவாடு போன்ற உணவுகளைப் பிரசவித்த பெண்களுக்குக் கொடுப்பார்கள்.. 

எனவே, பிரசவ கால பத்திய உணவு என்பது எக்காரணத்தைக் கொண்டும் சத்துக்குறைவான உணவு அல்ல. அது தாயின் செரிமானத்தை மேம்படுத்தி, உடனடி ஆற்றலைத் தந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, தாயும் சேயும் நலமுடன் இருக்கச் செய்யும் உன்னதமான உணவியல் முறை என்பதைப் புரிந்துகொள்ளவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...