Skip to main content

Doctor Vikatan: இரவு 10 மணி முதல் காலை 5.30 வரை தூக்கம்: ஆனாலும் சோர்வாக உணர்வது ஏன்?

Doctor Vikatan: தினசரி இரவு 10 மணிக்கு உறங்கி விடியற்காலை குறிப்பிட்ட நேரத்தில் (உதாரணத்துக்கு 5.30 மணிக்கு) எழுந்துவிடுவேன். சில நேரம் இரவு 12 மணிக்கு மேல் உறங்கினாலும் காலை 5.30 மணிக்கு எழுந்துவிடுகிறேன். ஆனால், அன்றைய தினம் முழுக்க சோர்வாக உள்ளது. இதைத் தவிர்க்க என்ன செய்வது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

தினமும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்வது உடலுக்கு நல்லது. ஆனால், சில சூழ்நிலைகளால் அது சாத்தியமில்லாமல் போகலாம். அப்படி நடக்கும்போது, போதுமான அளவு தூக்கம் கிடைக்காமல், 'Sleep Debt' எனப்படும் தூக்கக் கடன் நம் உடலில் சேரும். இதனால் நாம் அதிக சோர்வாக உணர்வோம், 

தூக்கம் குறையும் போது உடல் சீக்கிரம் வறட்சி அடையும். இது சோர்வை இன்னும் அதிகப்படுத்தும். அன்றைய தினம் வழக்கத்தை விட அதிகமாகத் தண்ணீர் குடியுங்கள். அதிகப்படியான காபி அல்லது டீ குடிப்பதைத் தவிர்க்கவும். இது தற்காலிகமாக உற்சாகம் தருவது போல இருந்தாலும், பிறகு உடலை இன்னும் சோர்வாக்கும். காலை எழுந்தவுடன் அல்லது சோர்வாக உணரும்போது சிறிது நேரம் சூரிய ஒளியில் இருப்பது நல்லது. சூரிய ஒளி உங்கள் உடலுக்கு 'இப்போது பகல்' என்ற உணர்வைத் தரும் (Circadian Rhythm). இதனால் 'மெலடோனின்' (தூக்கத்திற்கான ஹார்மோன்) சுரப்பது குறைந்து, நீங்கள் விழிப்பு உணர்வுடன் இருக்க உதவும்.

பகல் நேரத் தூக்கம் ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என நீளக் கூடாது.

பகல் நேரத்தில் ஒரு குட்டித் தூக்கம்  (Quick Nap) போடுவது நல்லது, ஆனால், அதை மாலை 3 மணிக்கு முன்னரே எடுத்துக்கொள்ள வேண்டும். மாலை நேரத்திலோ அல்லது இரவு  நெருங்கும் நேரத்திலோ  தூங்கினால், அது உங்கள் இரவுத் தூக்கத்தை பாதிக்கும். பகல் நேரத் தூக்கம் ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என நீளக் கூடாது. அதிகபட்சமாக 20 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஒருவேளை சோர்வு குறையவில்லை என்றால், விடுமுறை நாள்களிலோ அல்லது வார இறுதியிலோ கூடுதல் நேரம் தூங்கி அந்தத் தூக்கக் கடனைச் சரிசெய்யலாம்.

குறைவான தூக்கம் இருக்கும் நாள்களில் பலமான உணவுகளைத் தவிர்க்கவும். அதிக காரம் அல்லது எண்ணெய் உணவுகள் செரிமானத்திற்கு அதிக ஆற்றலை எடுத்துக் கொள்ளும். இது உங்கள் தூக்கத்தை பாதிக்கும். எனவே, எளிதில் செரிமானமாகும் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்வதையும் உறுதிசெய்யுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...