Skip to main content

சைனஸ் முதல் மைக்ரேன் வரை; மரு.சிவராமன் சொல்லும் தீர்வுகள்!

’’உண்மையில் ஒரு மருத்துவருக்குத் தலைவலி தரும் விஷயம் என்ன தெரியுமா? தலைவலிக்குக் காரணம் தேடுவது.

ஏனென்றால், தலைவலிக்கு 200-க்கும் மேற்பட்ட காரணங்கள் உண்டு’’ என்கிற சித்த மருத்துவர் கு.சிவராமன், சைனஸ் தலைவலி முதல் ஒற்றைத்தலைவலி எனப்படும் மைக்ரேன் வரைக்குமான காரணங்கள் மற்றும் தீர்வுகளைச் சொல்கிறார்.

தலைவலியைத் தூண்டும் வாழ்வியல் காரணங்கள் சில
தலைவலியைத் தூண்டும் வாழ்வியல் காரணங்கள் சில

* 6-7 மணி நேரமாவது தடை இல்லா இரவு நேரத் தூக்கம் கிடைத்திடாதபோது...

* ஷிப்ட் முறை வேலையால் சீரான நேரத்தில் தூங்க இயலாமல் நேரம் தவறித் தூங்கும்போது...

* காற்றோட்டமான வசிப்பிடம் இல்லாதபோது...

* தொல்பொருள் ஆய்வாளரிடம் சிக்கிய ஓலைச்சுவடிபோல, பர்ஸில் வைத்திருக்கும் 15 வருடங்களுக்கு முந்தைய பிரிஸ்கிரிப்ஷனை வைத்துக்கொண்டு, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடும்போது...

* சிங்கப்பூரில் சீப்பாகக் கிடைக்கும் என வாங்கி வந்து பரிசளிக்கப்பட்ட சென்ட்டை கக்கத்திலும் கைக்குட்டையிலும் விசிறிக்கொள்ளும்போது...

தலைவலியைத் தூண்டும் வாழ்வியல் காரணங்கள் சில...
தலைவலியைத் தூண்டும் வாழ்வியல் காரணங்கள் சில...

* ஊட்டி, கொடைக்கானல் ஊர்சுற்றலில், பெட்டிக்கடைகளில் மலிவான விலையில் விற்கப்படும் குளிர்கண்ணாடிகளை குஷியாக வாங்கி மாட்டிக்கொண்டு உலவும்போது...

* பாராட்டாகக் கொஞ்சம் புன்னகை, பரவசப்படுத்தும் உச்சி முத்தம், பரிதவிப்பை ஆசுவாசப்படுத்தும் அரவணைப்பு... இவை எதுவும் எப்போதுமே கிடைக்காதபோது...

மூக்கு அடைத்து, தும்மலுடன், முகம் எல்லாம் நீர் கோத்து வரும் சைனசைட்டிஸ் தலைவலி சிறார்களுக்கும் பெண்களுக்கும் அதிகம். இதற்கு மஞ்சள், சுக்கு வகையறாக்களைச் சேர்த்து அரைத்து உருட்டிய ’நீர்க்கோவை’ மாத்திரையை நீரில் குழைத்து நெற்றியில், மூக்குத்தண்டில், கன்னக் கதுப்பில் தடவி, ஓர் இரவு தூங்கி எழுந்தால் தலைவலி காணாமல் போகும்.

அதோடு, நொச்சித்தழை போட்டு ஆவி பிடிப்பது, இரவில் மிளகுக் கஷாயம் சாப்பிடுவது ஆகியவையும் தலைவலியைத் தீர்க்கும்.

தலைவலி தவிர்க்க...
தலைவலி தவிர்க்க...

சைனசைடிஸ் தலைவலியைப் போக்க சீந்தில் சூரணம் முதலான ஏராளமான சித்த மருந்துகள் உள்ளன. சீந்தில் கொடியை 'சித்த மருத்துவத்தின் மகுடம்' எனலாம்.

நீர்கோத்து, மூக்கு அடைத்து, முகத்தை வீங்க வைக்கும் சைனசைட்டிஸ் தலைவலிக்கு, அப்போதைக்கான வலி நீக்கும் மருந்தாக இல்லாமல், பித்தம் தணித்து மொத்தமாக தலைவலியை விரட்டும் அமிர்தவல்லி அது.

சைனசைட்டிஸோ, மைக்ரேன் தலைவலியோ... வாரம் இருமுறை சுக்குத் தைலம் தேய்த்துக் குளித்தால், வலி மெள்ள மெள்ள மறையும்.

மைக்ரேன் எனும் பித்தத் தலைவலிக்கு இஞ்சி ஓர் அற்புத மருந்து. இந்த வலி வராமலிருக்க, இஞ்சித் தேனூறல், இஞ்சி ரசாயனம் என நம் பாட்டி மருத்துவம் இருக்கிறது. இஞ்சியை மேல் தோல் சீவி, சிறு துண்டுகளாக்கி, தேனில் ஊறவைத்து, தினமும் காலையில் அரை டீஸ்பூன் சாப்பிட்டால், மைக்ரேனுக்குத் தடுப்பாக இருக்கும். இதுதான் இஞ்சித் தேனூறல்.

மைக்ரேன் எனும் பித்தத் தலைவலிக்கு இஞ்சி ஓர் அற்புத மருந்து.
மைக்ரேன் எனும் பித்தத் தலைவலிக்கு இஞ்சி ஓர் அற்புத மருந்து.

இஞ்சி, சீரகம், இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து, அந்தக் கூட்டுக்குச் சம அளவு ஆர்கானிக் வெல்லம் கலந்தால், இஞ்சி ரசாயனம் தயார். சாப்பாட்டுக்குப் பின் இதை அரை டீஸ்பூன் சாப்பிடுவது அஜீரணத் தலைவலியைத் தவிர்க்கும்.

மைக்ரேன் தலைவலிக்கு, அதிமதுரம், பெருஞ்சீரகம் (சோம்பு), ஹை ட்ரேஸ் (High Trace) மினரல்ஸ் சேர்க்காத நாட்டுச்சர்க்கரை கலந்த ஒரு டம்ளர் பால் உடனடித் தீர்வு தரும்.

சீந்தில், சுக்கு, திப்பிலிப் பொடியை மூன்று சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து முகர்ந்தாலே தலைவலி போகும் என, 'திருவள்ளுவ மாலை' எனும் நூல் குறிப்பிடுகிறது.

இந்த மூன்று பொருட்களும் சைனசைட்டிஸ், மைக்ரேன் மற்றும் மன அழுத்தத் தலைவலிக்கான தீர்வை உடையன என நவீன அறிவியல் சான்றையும் பெற்றவை. முகர்ந்தால் மட்டும் போதாது, சாப்பிடவும் வேண்டும்.

அஜீரணத் தலைவலி மற்றும் இரவெல்லாம் ’மப்பேறி' மறுநாள் வரும் ஹேங் ஓவர் தலைவலிக்கு சுக்கு, தனியா, மிளகு போட்டு கஷாயம் வைத்து, பனைவெல்லம் கலந்து குடித்தால், தலைக்கு ஏறிய பித்தம் குறைந்து, தலைவலி போகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...