Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பார்கள். ஆரோக்கியமான நபர் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது? -ராஜா, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி இது சர்க்கரைநோய் குறித்த புரிந்துணர்வு இல்லாமல் கேட்கப்பட்ட கேள்வியாகத் தெரிகிறது. எந்தப் பிரச்னையும் இல்லாத, ஆரோக்கியமான ஒரு நபர், சராசரியாக ஒரு நாளைக்கு 6 முதல் 7 முறை சிறுநீர் கழிப்பது இயல்பு. அதுவும் அந்த நபர், ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கக்கூடிய நபராக இருந்தால் இது இயல்பாக நடக்கும். நீரிழிவு பாதித்த ஒரு நபர், அதிக அளவிலும் அடிக்கடியும் சிறுநீர் கழிப்பது ஏன் என்பதை கவனிக்க வேண்டும். அவர் சாதாரண நபரைவிடவும் அதிக முறை சிறுநீர் கழிக்க வாய்ப்பு உண்டு. அதற்கு 'கிளைக்கோசூர்யா' (Glycosuria) என்று பெயர். உடலில் குளுக்கோஸ் அளவு அதிகமாகும்போது, அந்த குளுக்கோஸானது, செல்களுக்குள் உள்ள நீரை எல்லாம் வெளியே எடுத்து, அதிக அளவில் சிறுந...