Skip to main content

Juice: ஒரே நேரத்தில் முக்கால் லிட்டர் ஜூஸ் குடிக்கலாமா?

எங்கு பார்த்தாலும் 750 ml பழச்சாறுக்கடைகள் கண்களில் தென்படுகின்றன. பொதுவாக பழச்சாறு ஆரோக்கியமானதுதான்.

ஆனால், இப்படி 600 ml, 700 ml, 750 ml என ஜூஸ் குடிப்பதும், அதை அடிக்கடி குடிப்பதும் எந்தளவுக்கு நல்லது என்று டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் அவர்களிடம் கேட்டோம்.

Juice
Juice

''இன்றைக்கு பழச்சாறுகளை மக்கள் அதிகம் அருந்துகிறார்கள். அமிர்தமே என்றாலும் அளவுதான். அதே நேரம், சர்க்கரையைக் கொட்டி அரை லிட்டர், முக்கால் லிட்டர் என பழச்சாறுகளைக் குடித்தால், உடலில் கலோரிகள்தான் அதிகமாகும்.

தவிர, பழமாக சாப்பிட்டோம் என்றால், உதாரணத்துக்கு, நம்மால் ஒரு தர்பூசணித் துண்டுதான் சாப்பிட முடியும். ஆனால், இப்படி 600 , 700 என்று ஜூஸாக குடித்தால், ஒரே நேரத்தில் மூன்று, நான்கு துண்டுகளை ஜூஸாக அருந்திவிடுவோம். கூடவே, நார்ச்சத்தும் கிடையாது.

Juice
Juice

சாத்துக்குடி மற்றும் ஆரஞ்சில், அவற்றின் மொத்த நார்ச்சத்தையும் நீக்கி விட்டுதான் கொடுக்கிறார்கள். இந்த ஜூஸ்களில் சர்க்கரை சேர்க்காமலும் அருந்த முடியாது. இது நீரிழிவு மற்றும் உடல் பருமன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, யாருக்குமே நல்லதல்ல.

பழச்சாறுகளில் நமக்கு முக்கியமாக கிடைப்பது வைட்டமின் சி. நம் கண் முன்னே ஃபிரெஷ்ஷாக போட்டுத் தருகிற ஜூஸில்தான் வைட்டமின் சி நமக்கு முழுமையாக கிடைக்கும். அதை ஏற்கெனவே போட்டு வைத்துக் கொடுத்தால், வைட்டமின் சி மிக மிக குறைவாகவே கிடைக்கும் அல்லது கிடைக்கவே கிடைக்காது.

Juice
Juice

சிலர் சாப்பாட்டுக்கு பதில் இந்த முக்கால் லிட்டர் ஜூஸை அருந்துகிறார்கள். இதனால், அந்த நாளுக்குத் தேவையான புரதமோ, நல்ல கொழுப்போ கிடைப்பது கடினம்.

டெட்ரா பாக்கெட்டுகளில் கிடைக்கிற ஜூஸ்களில், பார்ப்பதற்கு ஈர்ப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டிருக்கலாம். இதுவும் ஜங்க் ஃபுட் போலத்தான்.

எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம், 750 ml juice குடிப்பது தேவையில்லாத அளவு. 300 ml வரை அருந்தலாம். அதிலும் சுகர் சிரப் விட்டெல்லாம் வேண்டவே வேண்டாம்.

முடிந்தவரை எல்லோருமே பழங்களைச் சாப்பிடுங்கள். பழச்சாறுகளைத் தவிருங்கள்'' என்கிறார் டயட்டீஷியன் தாரிணி.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...