Skip to main content

Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு தாம்பத்தியம்; வெஜைனல் க்ரீம் நிஜமாகவே உதவுமா?

Doctor Vikatan: என் வயது 48. மெனோபாஸ் வந்து ஒரு வருடமாகிறது. மெனோபாஸுக்கு பிறகு தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது வெஜைனா வறட்சி மிகவும் சிரமத்தைக் கொடுக்கிறது. இதற்கு க்ரீம் உபயோகிக்கலாம் என கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையிலேயே பலன் தருமா.. தொடர்ந்து உபயோகித்தால் பக்க விளைவுகள் ஏதும் வருமா..?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

மெனோபாஸின்போது வெஜைனா பகுதியில் வறட்சியும் எரிச்சலும் ஏற்படுவது சகஜம். இதனால் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவதில் சிரமம் இருக்கும். மருந்துக் கடைகளில் கிடைக்கும் லூப்ரிகன்ட்ஸை வாங்கி தாம்பத்திய உறவுக்கு முன் பயன்படுத்தி இந்த அவதியிலிருந்து விடுபடலாம்.

பெரிமெனோபாஸிலும் சரி மெனோபாஸிலும் சரி, பிறப்புறுப்பில் திரவக்கசிவு இருக்கும். 'வெஜைனல் எட்ரோஃபி' (Vaginal atrophy) என்ற பிரச்னையாலும் இப்படி இருக்கலாம். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால் வெஜைனா பகுதியில் வறட்சி அதிகமாகும். அந்த நிலையில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் வெஜைனாவிலிருந்து கசிவு ஏற்படலாம்.

அந்தக் கசிவானது நீர்த்து, மஞ்சள் அல்லது சாம்பல் நிறத்தில் வெளிப்பட்டால் வெஜைனா பகுதி ஆல்கலைனாக மாறிவிட்டதாக அர்த்தம். அதன் விளைவாக அங்கே பாக்டீரியா கிருமிகள் வளர்வது அதிகரிக்கும். அது வெஜைனா பகுதியில் இன்ஃபெக்ஷன் ஏற்படவும் காரணமாகும். அதற்கு சிகிச்சை அவசியம்.

தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டதன் விளைவாக ஏற்பட்ட கசிவு என்று தெரிந்தால் வெஜைனல் லூப்ரிகன்ட் அல்லது வெஜைனல் மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்கலாம். மருத்துவரின் ஆலோசனையோடு ஹார்மோன் க்ரீம், ஹார்மோன் தெரபி போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.

வெஜைனல் க்ரீம் உதவுமா?

மெனோபாஸ் வயதில் இருக்கும் பல பெண்களும், 'கணவர் தாம்பத்திய உறவில் ஈடுபட ஆர்வமாக இருக்கிறார்... எனக்கு விருப்பமும் இல்லை. வலியும் அதிகமாக இருக்கிறது...' என்ற புலம்பலோடு வருவார்கள். இவர்கள், மருத்துவ ஆலோசனையோடு ஜெல், க்ரீம், ஹார்மோன் மாத்திரைகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

சிலருக்கு திடீரென லேசான ப்ளீடிங் வரலாம். வெஜைனா சருமமானது வறண்டும் மெலிந்தும் போய் விடும். இந்த இரண்டையும் சரிசெய்ய ஈஸ்ட்ரோஜென் க்ரீம் உதவும்.

இவை எல்லாமே ஒரு பெண்ணின் வளர்சிதை மாற்றத்தோடு தொடர்புடையவை. எனவே, இந்தச்  சிகிச்சைகளை மருத்துவர் பரிந்துரைக்கும் காலகட்டத்தைத் தாண்டி எடுக்கக்கூடாது. அப்படித் தொடர்ந்தால் கல்லீரல் கூட பாதிக்கப்படலாம் என்பதால் மருத்துவ ஆலோசனையின்றி எதையும் உபயோகிக்காதீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...