Skip to main content

Doctor Vikatan: வைரல் வீடியோ.. Jumping Jacks பயிற்சி செய்தால் ஹார்ட் அட்டாக் வருமா?

Doctor Vikatan: ஜம்ப்பிங் ஜாக்ஸ் (Jumping Jacks) எனப்படுகிற உடற்பயிற்சியைச் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர், ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழந்த வீடியோ காட்சியை சமீபத்தில் செய்திகளில் பார்த்தேன். ஜம்ப்பிங் ஜாக்ஸ் என்ற பயிற்சி உயிரைப் பறிக்கும் அளவுக்கு அவ்வளவு ஆபத்தானதா...? 

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் 

ஷீபா தேவராஜ்

நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த வீடியோவை நானும் பார்த்தேன். ஜம்ப்பிங் ஜாக்ஸ் (Jumping Jacks) எனப்படுகிற பயிற்சியானது அதிக தீவிரத்தன்மை கொண்டது என்றோ, அதைச் செய்வதால் ஒருவருக்கு உயிரே போகும் ஆபத்து உள்ளது என்றோ சொல்லப்படுவதில் துளியும் உண்மை இல்லை.

ஜம்ப்பிங் ஜாக்ஸ் என்பது மிக மிக அடிப்படையான, ஆரம்பநிலை உடற்பயிற்சியாளர்களுக்கான மிதமான கார்டியோ பயிற்சி. அதில் ஜம்ப்பிங் வெர்ஷன், வாக்கிங் வெர்ஷன் என இரண்டு உண்டு. புதிதாக வொர்க் அவுட் செய்யத் தொடங்குபவர்களில் இருந்து, அனுபவம் வாய்ந்தவர்கள்வரை அனைவருமே இதைச் செய்வார்கள். எனவே, இந்தச் சம்பவத்தில்  இளைஞரின் உயிரிழப்புக்கு ஜம்ப்பிங் ஜாக்ஸை காரணமே சொல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனால், உடற்பயிற்சிக்கும் மாரடைப்பு சம்பவங்களுக்குமே தொடர்பு இருப்பதாகச் சொல்ல முடியாது.

ஜம்ப்பிங் ஜாக்ஸ் பயிற்சியை குறிப்பிட்ட நிமிடங்களுக்கோ அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலோ செய்யலாம்.

கார்டியாக் அரெஸ்ட்டோ, மாரடைப்போ இன்று உருவாகி, நாளை வருவதல்ல.

குறிப்பிட்ட இந்த வீடியோவில் அந்த இளைஞர் உயிரிழந்ததற்கும் ஜம்ப்பிங் ஜாக்ஸ் பயிற்சி காரணமாக இருக்காது. அந்த நபரின் ஆரோக்கியம் குறித்து முதலில் ஆராய வேண்டும். அவரது வாழ்க்கை முறை எப்படியிருந்தது, அவரது உணவுப்பழக்கம், எத்தனை மணி நேரம் தூங்குவார், அவருக்கு ஸ்ட்ரெஸ் இருந்ததா, வாழ்க்கையில் வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்தனவா என்பதெல்லாம் கவனிக்கப்பட வேண்டும். 

கார்டியாக் அரெஸ்ட்டோ, மாரடைப்போ இன்று உருவாகி, நாளை வருவதல்ல. பல ஆண்டுகளாக, பல மாதங்களாக நம் உடலில் பிரச்னை இருந்து, அது காட்டும் அறிகுறிகளை அலட்சியம் செய்ததன் விளைவாக திடீரென ஒருநாள் பெரிதாக வெளிப்படும்.

பல நாள்களாக சரியாகச் சாப்பிடாதது, தூங்காதது, ஸ்ட்ரெஸ்ஸுடன் இருப்பது போன்ற எல்லாம் சேர்ந்து ஒருநாள் உடலில் பிரச்னையாக வெடிக்கும். எனவே, இந்த நபருக்கும் இப்படி ஏதேனும் ஒரு பிரச்னை இருந்திருக்கலாம். மற்றபடி உடற்பயிற்சிக்கும் உயிரிழப்புக்கும் எந்தத் தொடர்பும் இருக்க வாய்ப்பே இல்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...