Skip to main content

Doctor Vikatan: எல்லா உணவுகளுக்கும் மயோனைஸ் கேட்கும் குழந்தை... மாற்று உண்டா?

Doctor Vikatan: என் 7 வயதுக் குழந்தைக்கு மயோனைஸ் என்றால் மிகவும் பிடிக்கிறது. பிரெட், சப்பாத்தி என எல்லா உணவுகளுடனும் மயோனைஸ் வைத்துதான் சாப்பிடுகிறான். கடைகளில் வாங்கும் மயோனைஸ்தான் தருகிறேன். இது ஆரோக்கியமானதா... வீட்டிலேயே மயோனைஸ் தயாரிக்க முடியுமா... மயோனைஸுக்கு மாற்று ஏதேனும் இருந்தால் சொல்லவும்.

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

மயோனைஸ் என்பது என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். அதில் எண்ணெய், வினிகர், முட்டை மற்றும் மசாலா பொருள்கள் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படும். சில தயாரிப்புகளில் கடுகுகூட சேர்ப்பதுண்டு. எனவே, மயோனைஸில் 70 முதல் 80 சதவிகிதம் தண்ணீரும், முட்டையின் வெள்ளைக் கருவும்தான் பிரதான சேர்க்கைகள்.

மயோனைஸில் சேர்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள பொருள்களை வைத்துப் பார்த்தாலே அதில் அதிக அளவில் கொழுப்பும், அதிக கலோரிகளும் இருப்பதைப் புரிந்துகொள்ளலாம். ஒருவேளை உங்கள்  குழந்தை ஏற்கெனவே உடல் பருமன் பிரச்னையோடு இருந்தால், நீங்கள் தினமும் அல்லது அடிக்கடி மயோனைஸ் கொடுப்பதால் குழந்தையின் எடை இன்னும் அதிகமாகும். எனவே,  அதைத் தவிர்ப்பதே சிறந்தது. என்றோ ஒருநாள் குழந்தைகளுக்கு மயோனைஸ் கொடுப்பதில் தவறில்லை. மல்ட்டிகிரெயின் பிரெட்டில் தடவியோ, வெஜிடபுள் டிப் ஆகவோ கொடுப்பதானால் அளவோடு கொடுக்கலாம்.

கொண்டைக்கடலையை வைத்துச் செய்யப்படும் ஹம்மஸ் என்ற உணவுகூட டிப் போலவே இருப்பதால் குழந்தைகளுக்குப் பிடிக்கும்.

மயோனைஸ் போன்றே உணர வேண்டும் என்றால் ஃப்ரெஷ் யோகர்ட் நல்ல சாய்ஸ். காய்கறிகளையே கூழாக்கி, டிப் போன்ற வடிவத்தில் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்கலாம். குழந்தைக்குப் பிடித்த காய்கறியில் இதை முயற்சி செய்து பாருங்கள். வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் மயோனைஸ் தயாரிக்கலாம். அவகேடோ ஆயில் அல்லது ஆலிவ் ஆயில் வைத்துத் தயாரிக்கலாம். அதையும் அளவோடுதான் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். பச்சை முட்டை சேர்ப்பதால் இன்ஃபெக்ஷன் வர வாய்ப்பிருப்பதால் அதைத் தவிர்ப்பது சிறந்தது.

கொண்டைக்கடலையை வைத்துச் செய்யப்படும் ஹம்மஸ் என்ற உணவுகூட டிப் போலவே இருப்பதால் குழந்தைகளுக்குப் பிடிக்கும். அதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுச்சத்துகள் என எல்லாம் இருப்பதால் இன்னும் ஆரோக்கியமானது. சர்க்கரைவள்ளிக்கிழங்கை கிரீக் யோகர்ட் உடன் மிக்ஸ் செய்தும் டிப் போல செய்து கொடுக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...