Skip to main content

Doctor Vikatan: பீரியட் பேன்ட்டீஸ் உபயோகிப்பது ஆரோக்கியமானதா?

Doctor Vikatan: சமீபகாலமாக பீரியட்ஸ் பேன்ட்டீஸ் என ஒன்று விளம்பரப்படுத்தப் படுகிறது. அதன் உபயோகம் என்ன.... நாப்கினுக்கு மாற்றாக அதை உபயோகிக்கலாமா.... பீரியட்ஸ் பேன்ட்டீஸ், பேன்ட்டீ லைனர்ஸ் போன்றவற்றை உபயோகிப்பது ஆரோக்கியமானதா?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

பீரியட்ஸ் பேன்ட்டீஸ் உபயோகிக்கலாமா என்று தெரிந்து கொள்வதற்கு முன்,  அதன் உபயோகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பீரியட்ஸ் பேன்ட்டீஸ் என்பவை பெண்கள் வழக்கமாக உபயோகிக்கும் உள்ளாடை போன்றதுதான்.

நாப்கின் எப்படி பீரியட்ஸ் நாள்களின் ரத்தப்போக்கை உறிஞ்சிக் கொள்ளுமோ, அதே போல் உறிஞ்சிக் கொள்ளும். இதில் பாலியூரிதின் லேமினேட்.....எனப்படும் ஃபேப்ரிக் இருக்கும். இது  ப்ளீடிங்கை உறிஞ்சிக் கொள்ளும்.

இதை உபயோகிக்கும் போது நாப்கின் உபயோகிக்க வேண்டியிருக்காது. ஆனால் அதே சமயம் இதை நாள் முழுவதும் உபயோகிக்க முடியாது. 

நாப்கின்

8  முதல் 10 மணிநேரத்துக்கொரு முறை இந்த பேன்ட்டீஸை மாற்ற வேண்டியிருக்கும். குழந்தைகளுக்கு உபயோகிக்கும் டயாப்பரில் உள்ளதுபோல இதில் லீக் ப்ரூஃப் கவரிங் இருப்பதால், ப்ளீடிங் வெளியே கசியாது. இதனால் சமீப காலமாக நிறைய பெண்கள் இதை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதே சமயம் பீரியட் பேன்ட்டீஸ் உபயோகிப்பதில் நடைமுறை சிக்கல்களும் உள்ளன. இது சற்று காஸ்ட்லியானது. இதைத் துவைத்துப் பயன்படுத்துவதும் சிரமம். நிறைய லேயர்கள் கொண்ட இந்த பேன்ட்டீஸை துவைத்துக் காயவைக்கும்போது, அதற்கு நீண்டநேரம் எடுக்கும்.

எனவே ஒரு பீரியட்ஸுக்கு உங்களுக்கு நான்கைந்து பேன்ட்டீஸ் தேவைப்படலாம். பணியிடங்களிலும் வெளியிடங்களிலும் இதை மாற்றுவதும் சிரமமாக இருக்கும். அதிக ப்ளீடிங் உள்ளவர்கள் இதைப் பயன்படுத்துவது சரியாக இருக்காது. நீண்ட நேரம் இதைப் பயன்படுத்துவதால் ப்ளீடிங் வாடை வீசலாம்.

underwear

கெமிக்கல் சேர்த்துச் செய்யப்பட்ட மற்றும் வாசனை சேர்த்துச் செய்யப்பட்ட நாப்கின், பேன்ட்டீஸ் எதுவுமே உபயோகிக்க ஏற்றவை அல்ல. ஏனெனில் அது வெஜைனா பகுதியில் உள்ள நல்ல பாக்டீரியாவை அழித்துவிடும்.

சிலவகை பீரியட் பேன்ட்டீஸில் அதிக அளவிலான பெர் அண்ட் பாலிஃப்ளுரோஆல்கைல் சப்ஸ்டன்ஸ்.  (per- and polyfluoroalkyl substances) இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இது அந்த பேன்ட்டீஸின் உள் மற்றும் வெளி லேயர்களில் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை 'ஃபார்எவர் கெமிக்கல்' என்று சொல்கிறார்கள். இது அந்த பேன்ட்டீஸை எண்ணெய், தண்ணீர், வெப்பம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பதாகச் சொல்கிறார்கள்.

Vaginal

இந்தப் பொருளானது சூழலுக்கு உகந்ததல்ல, அதிக நாள்கள் உபயோகிப்பதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம், கல்லீரல் பாதிக்கப்படலாம், கருத்தரிப்பதில் சிக்கல் வரலாம், சிலவகை புற்றுநோய் பாதிக்கலாம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

எனவே பீரியட்ஸுக்கான பிரத்யேக உள்ளாடை வாங்கும்போது PFAS ஃப்ரீ என குறிப்பிடப்பட்டிருப்பதாகப் பார்த்து வாங்க வேண்டும். அவற்றில் இப்படிப்பட்ட கெமிக்கல்கள் வராது. நாப்கினோ, டாம்பூனோ, மென்ஸ்டுரல் கப்போ எது உபயோகித்தாலும் மாதவிடாய்கால சுகாதாரம் மிக முக்கியம்.

Menstrual Hygiene (Representational image)

பிறப்புறுப்புப் பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சாதாரண தண்ணீரால் கழுவினால் போதுமானது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வாசனை உள்ள பொருள்களை உபயோகிக்கக்கூடாது. பேன்ட்டி லைனர் என்பது லேசான ப்ளீடிங், வெள்ளைப்படுதல் போன்றவற்றுக்கு உபயோகிப்பது. அது பீரியட்ஸ் நாள்களில் உபயோகிக்க ஏற்றதல்ல.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...