Skip to main content

மீண்டும் பரவும் கோவிட்; தடுப்பூசி தேவையில்லை... ஏன் தெரியுமா?!

வாழ்வின் கொடூர நாள்களை கோவிட் மக்களுக்குக் காட்டிவிட்டது. மக்களின் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை பாரபட்சமில்லாமல் சூறையாடிய கோவிட் முற்றிலும் ஒழிந்த பாடாக இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அதன் தாக்கம் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. இப்போது கடந்த சில வாரங்களாக மீண்டும் புதிய வேரிய்ன்ட் முளைத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் அமெரிக்காவில் புதிய வேரியன்டான JN.1-ன் பாதிப்பு அதிகரித்து இருந்தது. அமெரிக்காவைத் தாண்டி பல நாடுகளிலும் இந்த வேரியன்ட்டின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள நாடுகள் கோவிட் 19 பாதிப்புகள் மற்றும் அதன் பரவலை கண்காணிக்குமாறு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.

covid-19

BA.2.86-ன் வழிதோன்றிய புதிய வேரியன்டான JN.1-ன் பாதிப்பு இந்தியாவிலும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  அதனை தொடர்ந்து தற்போது அச்சுறுத்தி வரும் புதிய வேரியன்ட்களுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு பதிலளித்துள்ள இந்தியாவின் SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா, ``தற்போதுள்ள புதிய சப் வேரியன்ட்டுக்கு எதிராகக் கூடுதல் டோஸ் தடுப்பூசி தேவையில்லை'' என்று கூறியுள்ளார். 

இந்தியாவை பொறுத்தவரையில் அக்டோபர் மாத இறுதியில் இருந்து இதுவரையில் புதிய வேரியன்ட் மூலம்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 என பதிவாகி உள்ளது.

ஒமிக்ரான் போன்ற வேரியன்ட்கள் ஏற்படுத்தும் காய்ச்சல், இருமல், கடுமையான உடல்வலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளையே JN.1 வேரியன்ட்டும் வெளிப்படுத்துகிறது. அதனால் ஒருவர் இதனை வேறுபடுத்தி அறிவது கடினமாக இருக்கிறது.   

காய்ச்சல்

எனவே 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் (Comorbidity), புற்றுநோய் நோயாளிகள் போல, எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது அவசியம்.

ஆகவே புதிய வேரியன்ட்டிற்கு எதிராகக் கூடுதல் டோஸ் தடுப்பூசி தேவையில்லை. நோய் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்.கே. அரோரா கூறியுள்ளார்.

கோவிட் தொற்றின் பாதிப்பால் உங்களது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?... கமென்டில் சொல்லுங்கள்!


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...