Skip to main content

`6.5% கோவிட் நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆன ஒரு வருடத்திற்குள் இறப்பு’ - ஐசிஎம்ஆர் ஆய்வு

கொரோனா தொற்றுக்குப் பிந்தைய விளைவுகளை அனுபவிக்கும் நோயாளிகளில் 6.5% பேர் மருத்துவமனையில் இருந்து திரும்பிய ஓராண்டுக்குள் இறந்ததாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நெட்ஒர்க்கின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

கோவிட்-19 தொற்று

ஆய்வின் முடிவில், ’நோய்த்தொற்று ஏற்படுவதற்கு முன், குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 60% பாதுகாப்பை வழங்கியது. 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், இணைநோய் (Comorbidities) பாதிப்பு இருந்தவர்கள் மற்றும் கடுமையான கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஒரு வருடத்திற்குள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலை 18-45 வயதுள்ளோருக்கான ஆய்வில் பங்கேற்றவர்களிடமும் காணப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’இந்த முடிவுகள், ஆரம்ப கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்புடையது, கோவிட்-19 பாதிப்புக்கு உள்ளான அனைத்து நோயாளிகளுக்கும் இதை பொதுமைப்படுத்த முடியாது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிட்-19 குழுவிற்கான தேசிய மருத்துவப் பதிவேட்டால் நடத்தப்பட்ட இந்த ஆய்வானது, ஒரு வருடத்திற்குப் பிந்தைய டிஸ்சார்ஜ் இறப்பு தொடர்பான காரணிகளை மதிப்பீடு செய்துள்ளது.

ஐ.சி.எம்.ஆர்

ஐ.சி.எம்.ஆர், கோவிட்-19க்கான தேசிய மருத்துவப் பதிவேட்டை நாடு முழுவதும் 31 மையங்களில் பராமரித்து வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து கோவிட்-19 நோயாளிகளும் டிஸ்சார்ஜ் ஆன பிறகு ஒரு வருடம் வரை அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொள்ளப்பட்டனர்.

’பிப்ரவரி 2023 வரை சேகரிக்கப்பட்ட தரவு, பகுப்பாய்வின்படி, 14,419 பங்கேற்பாளர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது தொடர்பு கொண்டதாகக் கூறினர். மேலும் 942 (6.5%) பேர் பல காரணங்களால் இறந்துவிட்டதாகப் பதிவாகியுள்ளது. கோவிட் -19 தொற்றில் இருந்து மீண்ட பிறகும், அதிக இறப்பு இணை நோய் உள்ள மக்களிடம் ஏன் காணப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கல்லீரல்அழற்சி மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் போன்ற நிலைமைகளைக் கொண்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் சிக்கலான கோவிட் -19 பின் விளைவுகளைப் பெற வாய்ப்புள்ளது’ என்று ஆய்வை மேற்கோண்ட விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சிகிச்சை

கோவிட்-19 தொற்றுக்கு அடுத்த ஆண்டில் பதிவான இறப்புகளை விளக்க, பல்வேறு கருதுகோள்கள் பரிசீலிக்கப்பட்டதாக ஆய்வு கூறுகிறது. இந்த மரணங்கள் நீடித்த வீக்கம், வைரஸ் காரணமாக உறுப்பு சேதம், எண்டோடெலியல் செயலிழப்பு உள்ளிட்ட காரணிகளால் ஏற்பட்டிருக்கலாம் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...