Skip to main content

18 வருடங்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி... AI தொழில்நுட்ப உதவியால் பேசும் ஆச்சர்யம்!

பக்கவாதத்தால் பேச்சின்றி முடங்கிப் போயிருந்த ஒரு பெண்ணுக்கு, அவரது மூளையிடம் இருந்து சிக்னல் பெற்று, அவர் பேச நினைத்ததை ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் வார்த்தைகளாக்கி உதவ ம் மருத்துவத்துறையில் புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

47 வயதான ஆன் (Ann) 18 ஆண்டுகளுக்கு முன்பு மூளை தண்டுவட பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் பேசவோ அல்லது டைப் செய்யவோ முடியாத கடினமான சூழல் உருவானது.

இந்நிலையில் தற்போது ஏ.ஐ. மூலம் மோஷன் - ட்ராக்கிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நிமிடத்திற்கு 14 வார்த்தைகள் வரை மெதுவாகப் பேசி வருகிறார். மருத்துவத்துறையில் இது பலரின் கவனத்தையும் பெற்று வருகிறது.

பக்கவாதம்!

இப்பணியை மேற்கொண்ட ஆராய்ச்சிக்குழுவானது, அவரின் மூளையின் மேற்பரப்பில், 253 மெல்லிய காகித மின்முனைகளைப் பொருத்தியது. இதன் மூலம் இவரின் தனித்துவமான பேச்சு ஒலிகளின் வடிவங்களை, மூளை சமிக்ஞைகளாக வெளிப்படுத்தும். இதனை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் ஏ.ஐ. அல்காரிதம் தொழில் நுட்பத்திற்கு, உரிய பயிற்சி தரப்பட்டுள்ளது.

எனவே, இவரின் தனித்துவமான 39 ஒலிகள், சமிஞ்சைகளை சாட் ஜிபிடி பாணியில் கம்ப்யூட்டரானது மொழி வாக்கியமாக மாற்றும்.

இந்தத் தொழில்நுட்பமானது முழுமையாக குறைபாடற்றது என்று கூறிவிடமுடியாது. முகபாவனை மற்றும் பேச்சை எழுத்து வடிவில் மாற்றும் போது, 28 சதவிகித வார்த்தைகள், டீகோடிங் எரர் ஆகலாம். அதோடு வழக்கமாகப் பேசப்படும் 110 -150 வார்த்தைகளுடன் ஒப்பிடுகையில், இதில் நிமிடத்திற்கு 78 வார்த்தைகளே பெறப்படுகின்றன.

Treatment (Representational Image)

``மற்றவர்களுடன் கருத்தை வெளிப்படுத்த மிகவும் இயற்கையான வழியை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். நோயாளிகளுக்கு இது உண்மையான தீர்வாக மாற்றும் பணியில் எங்களை மிகவும் நெருக்கமாகக் கொண்டு வருகிறது" என இந்த முயற்சியை முன்னெடுத்த, கலிஃபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் எட்வர்ட் சாங் தெரிவித்துள்ளார்.  


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...