Skip to main content

`அதிகரிக்கும் வேலையின்மை’ - முழு நேர `பிள்ளை’களாக மாறும் சீன இளைஞர்கள்!

சமீபத்தில் சீனாவைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர், தன் வேலையினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மிகவும் அவதிப்பட்டுள்ளார். அவரை சரி செய்வதற்காக அவரின் பெற்றோர் அந்த வேலையை விட்டுவிட்டு தங்களின் முழு நேர மகளாக இருந்தால் மாதம் 4,000 யென் (இந்திய மதிப்பில் 49,000) தருவதாகக் கூறியுள்ளனர். அந்தப் பெண்ணும் தன் வேலையை விட்டுவிட்டு பெற்றோர்களுக்கு உதவி செய்வது, அவர்களுடன் நேரம் செலவிடுவது என மன அழுத்தம் இல்லாத முழுநேர மகளாக இருந்து வருகிறார். சீனாவில் இப்படி நிறைய இளைஞர்கள் முழு நேரப் பிள்ளைகளாக வேலை செய்து வருகிறார்களாம். சீனாசீனாவில் பெய்த `புழு மழை...' வைரல் வீடியோ உண்மையா? சீனாவின் பெய்ஜிங்கை சேர்ந்த 29 வயதான ஜூலி என்ற பெண் கேம் டெவலப்பராக வேலை செய்து வந்துள்ளார். அவர் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்தாக வேண்டிய சூழலில் இருந்துள்ளார். இதனால் மிகவும் மன அழுத்தத்துக்கு ஆளான ஜூலி, தற்போது தன் வேலையை விட்டுவிட்டு 2,000 யென்களுக்கு தன் பெற்றோர்களுக்கு முழு நேர மகளாக இருந்து வருகிறார். அவர் தினமும் வீட்டில் பாத்திரங்களைக் கழுவது, பெற்றோருக்கு உணவு தயாரிப்பது மற்றும் பிற வீட்டு வேலைகளைச் செய்வதில் தன் நாளைக் கழிக்கிறார். ஜூலியின் பெரும்பாலான அன்றாட செலவுகளுக்கு அவரின் பெற்றோர் பணம் தருகின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இதற்கு முன் அவர் செய்த 16 மணி நேர வேலையில் இருந்து விடுபட்டு மூச்சு விடுவதற்கு தற்போது நேரம் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார் ஜூலி. ``நான் இதற்கு முன்னர் நடைபிணம் போல வாழ்ந்து வந்தேன், வேலை, வேலை வேலை இது மட்டுமே என் உலகமாக இருந்தது ஆனால், தற்போது என் பெற்றோர்களுக்கு மகளாக தினமும் மாறுபட்ட வேலைகளைச் செய்கிறேன். ஓய்வெடுக்கிறேன், பெற்றோருடன் சுற்றுலா செல்வது, வீட்டு வேலைகளைச் செய்வது என மிகவும் நிம்மதியான வாழ்வை வாழ்ந்து வருகிறேன். சீனாசீனாவில் வாடகை அப்பாக்கள் அறிமுகம்: Bath House-க்கு ஆண் குழந்தையோடு வரும் அம்மாக்களுக்கு உதவ திட்டம் என் ரோபோ வாழ்க்கையில் இருந்து ஓய்வெடுப்பதற்காக தற்போது இதைச் செய்து வருகிறேன். மற்றொரு புறம் வேறு வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் சரியாக அமையவில்லை. என் வேலையை விடும் முன் புதிய வேலை தேடிய பின்னரே அதை விட வேண்டும் என நினைத்தேன். ஆனால், புதிய வேலை கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது, தற்போது வேலையை விட்ட பிறகு அது இன்னும் கடினமாகி விட்டது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் நான் 40-க்கும் மேற்பட்ட வேலை விண்ணப்பங்களை அனுப்பிவிட்டேன். ஆனால், இதுவரை எனக்கு இரண்டு நேர்காணல் அழைப்புகள் மட்டுமே வந்துள்ளன. இங்கே வேலை கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது” என வேதனையுடன் பேசியுள்ளார். சீனாவில் 16 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் ஐந்தில் ஒருவருக்கு வேலையில்லாமல் உள்ளது. அங்கு இளைஞர்களின் வேலையில்லா விகிதம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்திய புள்ளி விவரங்களின்படி சீனாவில் வேலையில்லாதவர்களின் விகிதம் 21% ஆக அதிகரித்துள்ளது. மிதமான உள்நாட்டு நுகர்வு, தனியார் தொழில்துறையின் பின்வாங்கல் மற்றும் போராடும் வணிக சந்தை, கொரோனாவால் அடிபட்ட பொருளாதாரம் என அனைத்தும் சேர்ந்து சீனாவில் மிக அதிகமான வேலையில்லா திண்டாட்ட நிலையை உருவாக்கியுள்ளது.
http://dlvr.it/SsvMmc

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...