Skip to main content

கின்னஸ் சாதனை பூனை முதல் மலேசியாவின் பிரதமரான அன்வர் இப்ராஹிம் வரை... உலக செய்திகள் ரவுண்ட்அப்!

தெற்கு ரஷ்ய நகரமான கிரிம்ஸ்கில் உள்ள ஒரு ஷாப்பிங் சிட்டியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் இறந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.பிரான்ஸ் நாடாளுமன்றம் கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பில் சேர்க்க நாடாளுமன்றத்தில் பிரான்ஸ் வாக்களிக்கவிருக்கிறது. அமெரிக்கா மற்றும் போலாந்தின் சட்ட மாற்றத்திற்குப் பிறகு இந்த முயற்சியை பிரான்ஸ் எடுத்திருக்கிறது. முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்பின் மீது பாலியல் குற்றம் சாட்டிய எழுத்தாளர் ஜீன் கேரோல், அவருக்கு எதிராக இரண்டாவது வழக்கையும் தாக்கல் செய்திருக்கிறார். 25 வருட போராட்டத்துக்குப் பிறகு மலேசியாவின் 10- வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்றார். இங்கிலாந்தில் 26 வருடங்கள் 329 நாள்கள், அதாவது கிட்டத்தட்ட 120 மனித ஆண்டுகளுக்கு சமமான "ஃபாளாசி" என்ற பூனையை 'உலகின் வயதான பூனை 'என்று கின்னஸ் உலக நிறுவனம் அறிவித்திருக்கிறது. பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் தற்போது CSL Behring's Hemgenix-hemophilia B மரபணு சிகிச்சைக்கு அனுமதி அளித்து, இதை உலகின் மிக விலை உயர்ந்த மருந்தாக உருவாக்கியிருக்கின்றனர். இந்த மருந்தின் விலை , இந்திய ரூபாயில் 28.58 கோடி மதிப்புடையது. துருக்கியின் வட மேற்கு பகுதியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. இதில் 68 பேர் காயமடைந்தனர் எனக் கூறப்படுகிறது. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவருடைய மனைவியான அக்ஷதா மூர்த்தி ஆகியோர் இங்கிலாந்தின் "ஆசிய பணக்காரர்கள் பட்டியல் 2022" -ல் ('Asian Rich List 2022') இடம்பிடித்திருக்கின்றனர். அமெரிக்காவில், வால்மார்ட் மேலாளர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட ஆறு பேரில், ஐந்து பேரை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து அரசின் அனுமதியின்றி சுதந்திரம் குறித்த புதிய வாக்கெடுப்புகள் நடத்த ஸ்காட்லாந்துக்கு அதிகாரம் இல்லை என்று இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
http://dlvr.it/SdP11Q

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...