Doctor Vikatan: என்னுடைய நண்பன் ஒருவன் புரோட்டீன் பவுடர் வாங்கி வைத்துக்கொண்டு தினமும் இருவேளைகள் குடிக்கிறான். புரோட்டீன் சப்ளிமென்ட்டுகள் வொர்க் அவுட் செய்பவர்கள்தானே எடுத்துக்கொள்ள வேண்டும்.... உடற்பயிற்சி செய்யாதவர்கள் எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் பிரச்னைகள் வருமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ். ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் புரோட்டீன் (புரதச்சத்து) என்பது நமது உடலுக்குத் தேவையான மிக முக்கியமான மேக்ரோ நியூட்ரியன்ட்... அதாவது பேரூட்டச்சத்து. நம் உடலுக்கு மூன்று பேரூட்டச்சத்துகள் மிகவும் முக்கியம். அவை கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கொழுப்புச்சத்து. கார்போஹைட்ரேட் என்பதுதான் நம் உடலுக்கு முதன்மையான எரிபொருள் ஆதாரம் (Primary fuel source) ஆகும். புரதச்சத்து என்பது முக்கியமாக தசைகளை மீட்டெடுப்பதற்கும் (Muscle recovery) தசை வளர்ச்சிக்கும் மிகவும் தேவையானது. நல்ல கொழுப்புகள் (Good fats) என்பவையும் நம் உடலுக்கு எரிபொருள் ஆதாரம்தான். பொதுவாக நம் இந்திய உணவு முறையை (Indian diet) எடுத்துக்கொண்டால், அதில் கார்போஹைட்ரேட்தான் ...