Doctor Vikatan: எனக்கு வயது 43. அடிக்கடி தூக்கத்தில் உடல் தூக்கிப் போடுவது போல உணர்கிறேன். அதன் காரணமாக தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு கண்விழிக்கிறேன். இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்... இதற்கு மருத்துவப் பரிசோதனை, சிகிச்சை அவசியமா? பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர். மருத்துவர் கே. பாஸ்கர் தூக்கத்தில் ஏதோ ஒரு பெரிய பாதாளத்தில் விழுவது போன்ற உணர்வு ஏற்பட்டு பயத்தில் தூக்கம் கலையலாம். இதை 'ஹிப்னிக் ஜெர்க்' (hypnic jerk) என்று ஆங்கிலத்தில் சொல்வோம். இதனால் தூக்கத்தில் உடல் தூக்கிப் போடுவது போன்ற உணர்வு ஏற்படும். இதனால் எந்த ஆபத்தும் இல்லை. இந்தப் பிரச்னை நூற்றில் 60, 70 பேருக்கு இருப்பதுதான். இந்தப் பிரச்னை எந்த வயதினருக்கும் வரலாம். இதற்காக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்கத் தேவையில்லை. Doctor Vikatan: த்ரில்லர் சினிமா பார்த்தால் அபார்ஷன் ஆகுமா? தூக்கத்தில் தூக்கிப் போடும் இந்த உணர்வு ஏற்படுவதற்கான சரியான காரணத்தை இதுவரை எந்த மருத்துவ ஆய்வும் கண்டுபிடிக்கவில்லை. தூங்கும்போது நம் உடல் தசைகள் நன்கு தளர்ந்த நிலையில் இர...