Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது. சில சமயங்களில் அது ரொம்பவும் தீவிரமாகி, தலைச்சுற்றல் ஏற்படும். அப்போது சட்டென உப்பு அதிகமான உணவுகளைச் சாப்பிடுவேன். லோ பிபி உள்ளவர்கள் இயல்பிலேயே உணவில் உப்பு கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) உள்ளவர்கள் உணவில் அதிக உப்பைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தவறான எண்ணம் பலரிடம் இருக்கிறது. ரத்த அழுத்தம் மிகவும் குறையும் நேரங்களில் மட்டும் மோர் அல்லது எலுமிச்சைப்பழச் சாற்றில் சிறிது உப்பு சேர்த்துப் பருகலாம். அதனால் ரத்த அழுத்தம் சீராகும். ஆனால், அதையே எப்போதும் செய்வது சரியானதல்ல. தினசரித் தேவையைவிட எப்போதும் அதிகமாக உப்பு எடுத்துக்கொள்வது யாருக்குமே நல்லதல்ல. சாதாரணமாக ஒரு நாளைக்குத் தேவையான உப்பின் அளவு 5 கிராம் என்றால், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் 7.5 கிராம் வரை எடுத்துக்கொள்ளலாம். குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தூள் உப்பிற்கு (Table Salt) பதிலாக ...