கோடைக்காலம் தொடங்கிவிட்டது... பழைய சோறு, நீராகாரம் பற்றிய அறிவுரைகள் இந்த வருடமும் தவறாமல் நம்மிடம் வரும். நட்சத்திர ஹோட்டல்களில் இவையெல்லாம் இடம்பெறும். இந்நிலையில், 'மறு உலைக் கஞ்சி' என்ற பெயரில் ஓர் உணவு குறித்த வீடியோ கடந்த சில நாள்களாக வைரலாகி வருகிறது. வடித்த சோற்றில் நீர் ஊற்றிவைத்து, அதை உணவாக அல்லாமல், மருந்தாகப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அதுதான் மறு உலைக் கஞ்சியாம். அதை ஆறு மாதங்கள்வரை கூட வைத்திருந்து பயன்படுத்தலாம் என்கிறார்கள். சித்த மருத்துவர் விக்ரம்குமார் இப்படியோர் உணவு உண்மையிலேயே வழக்கத்தில் இருந்ததா, மறு உலைக் கஞ்சி என்பது மருந்தாகும் உணவா... திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமாரிடம் பேசினோம். இருமுறைக் கஞ்சியே மறு உலைக் கஞ்சி! ''கஞ்சி ரகங்களைப் பொறுத்தவரை சித்த மருத்துவத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும், மாவட்டத்திலும் வெவ்வேறு ரகங்களில் கஞ்சி ரகங்களைத் தயாரித்து வந்திருக்கிறார்கள். இது குறித்த பல குறிப்புகள் உணவு சார்ந்த நூல்களிலும், சித்த மருத்துவ நூல்களிலும் இருக்கின்றன. கஞ்சிக்கான மகத்துவ...