Skip to main content

டிரெண்டாகும் 'மறு உலைக்கஞ்சி...' ஆறு மாதங்கள் வைத்திருந்து சாப்பிடுவது மருந்தா, ஆபத்தா?

கோடைக்காலம் தொடங்கிவிட்டது...  பழைய சோறு, நீராகாரம் பற்றிய அறிவுரைகள் இந்த வருடமும் தவறாமல் நம்மிடம் வரும்.  நட்சத்திர ஹோட்டல்களில் இவையெல்லாம் இடம்பெறும். இந்நிலையில், 'மறு உலைக் கஞ்சி' என்ற பெயரில் ஓர் உணவு குறித்த வீடியோ கடந்த சில நாள்களாக வைரலாகி வருகிறது. வடித்த சோற்றில் நீர் ஊற்றிவைத்து, அதை உணவாக அல்லாமல், மருந்தாகப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அதுதான் மறு உலைக் கஞ்சியாம். அதை ஆறு மாதங்கள்வரை கூட வைத்திருந்து பயன்படுத்தலாம் என்கிறார்கள். 

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

இப்படியோர் உணவு உண்மையிலேயே வழக்கத்தில் இருந்ததா, மறு உலைக் கஞ்சி என்பது மருந்தாகும் உணவா... திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமாரிடம் பேசினோம்.

இருமுறைக் கஞ்சியே மறு உலைக் கஞ்சி!

''கஞ்சி ரகங்களைப் பொறுத்தவரை சித்த மருத்துவத்தில் பல்வேறு வகைகள் உள்ளன.  ஒவ்வொரு கிராமத்திலும், மாவட்டத்திலும் வெவ்வேறு ரகங்களில் கஞ்சி ரகங்களைத் தயாரித்து வந்திருக்கிறார்கள். இது குறித்த பல குறிப்புகள் உணவு சார்ந்த நூல்களிலும், சித்த மருத்துவ நூல்களிலும் இருக்கின்றன.  கஞ்சிக்கான மகத்துவம் மற்றும் அதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் ஏராளமான பதிவுகள் உள்ளன.

'மறு உலைக் கஞ்சி' என்பது சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்ட 'இருமுறைக் கஞ்சி'யைக் குறிப்பது. அதாவது இருமுறை வடித்த கஞ்சியின் மறு உருவமாகச் சொல்லலாம். இந்தக் கஞ்சிக்கு சித்த மருத்துவத்தில் 'புனர்பாகம்' என்றும் ஒரு பெயர் உண்டு.

இருமுறை வடித்த கஞ்சி என்பது சாதாரணமாகக் கஞ்சி தயாரிப்பது போன்றதுதான்.

இருமுறை வடித்த கஞ்சி என்பது  சாதாரணமாகக் கஞ்சி தயாரிப்பது போன்றதுதான்.  அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து  20 முதல் 30 நிமிடங்கள் சிறு தீயில் வைக்க வேண்டும். கஞ்சி பதத்திற்கு வந்த பிறகு, அதனை எடுத்துவிட்டு மீண்டும் இன்னொரு முறை அதேபோலச் செய்ய வேண்டும். இப்படி இரண்டாவது முறை செய்வதால்தான் இது இருமுறைக் கஞ்சி எனப்படுகிறது.  இரண்டாவது முறை செய்த கஞ்சியில் கொஞ்சம் சர்க்கரையும்,  கால் முதல் அரை டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறும் சேர்க்கச் சொல்கிறார்கள். இந்தக் கஞ்சிக்கு  பித்தத்தைக் குறைக்கக்கூடிய செயல்பாடு உண்டு. தவிர, அம்மை நோய்களுக்குக் கொடுக்கக்கூடிய உணவாகவும் அந்தக் காலத்தில் இந்த 'புனர்பாகம்' அல்லது இருமுறை வடித்த கஞ்சியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

குளிர்ச்சி தரக்கூடியது, குடலுக்கு நல்லது!


மறுஉலைக் கஞ்சி உடலுக்கு நல்ல  குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது. சில மணி நேரம் முதல் சில நாள்கள் வரை  இதை வைத்திருந்து பயன்படுத்துவதால் இதில் 'ஃபெர்மென்டேஷன்' (Fermentation) எனப்படும் நொதித்தல் நடக்கும். இந்த நொதித்தல் மூலம், உடலுக்கு நன்மை செய்யக்கூடிய 'புரோபயாடிக்' (Probiotic) பாக்டீரியாக்கள் அல்லது கிருமிகள்  அதிகரிக்கும். அதுவே பல்வேறு நோய்களைக் குறைப்பதற்கான செயல்களைச் செய்யும்.

சிவப்பு அரிசி

நொதிக்க வைக்கப்பட்ட பானங்களை, உணவுகளை எடுத்துப் பழகியவர்கள் நாம் என்பதால்,  இந்தக் கஞ்சியும் அப்படி ஓர் உணவாகப் பார்க்கப்படுகிறது. கஞ்சி என்றாலே அதில் நிறைய ஊட்டச்சத்துகள் இருக்கும். குறிப்பாக, பாரம்பர்ய அரிசிகளில், வண்ண வண்ண அரிசிகளில் (Coloured rice) இந்தக் கஞ்சியைத் தயாரிக்கும்போது, அதிலுள்ள எல்லா ஊட்டச்சத்துகளும் முழுமையாக நமக்குக் கிடைப்பதற்கான வாய்ப்புகள்  அதிகரிக்கும். குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது என்பதால், இது வயிறு தொடர்பான பிரச்னைகளை குணமாக்கும். அல்சர் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும். 

அல்சர் நோயாளிகள் கவனம்!

வயிற்றுப் புண்ணைக் குறைப்பதற்காக இருமுறை வடித்த கஞ்சியை எடுக்கிறோம் என்றால், அதில் எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டாம் என சித்த மருத்துவம் அறிவுறுத்துகிறது.  காய்ச்சல் வந்து போன பிறகு உடலைத் தேற்றுவதற்கும், ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பவர்களுக்கும் இந்தக் கஞ்சி மிகச் சிறந்தது.  மறு உலைக் கஞ்சியை நாள்பட வைத்துப் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள். அப்படிச் செய்யும்போது சரியாக நொதித்துச் சுவையாக இருக்கும்போது பயன்படுத்தலாம். ஆனால், நாள்பட வைக்கும்போது சரியான முறையைப் பின்பற்றுகிறோமா, கஞ்சி கெட்டுப்போகாமல் உள்ளதா என்று பார்த்துப் பயன்படுத்த வேண்டியது மிக முக்கியம்.

வயிற்றுப் புண்ணைக் குறைப்பதற்காக இருமுறை வடித்த கஞ்சியை எடுக்கிறோம் என்றால், அதில் எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டாம் என சித்த மருத்துவம் அறிவுறுத்துகிறது.

அந்தக் காலத்தில் மறு உலைக் கஞ்சியை மாதக் கணக்கில் வைத்திருந்து பயன்படுத்தியதாகச் சொல்கிறார்கள். தற்போதைய வாழ்க்கை முறையில் அது சாத்தியமா என்று தெரியவில்லை. அப்படிச் செய்கிறவர்கள், கிராமத்தினரிடம் சரியான முறையைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். உணவு என்பதால் தவறு நிகழ்ந்துவிட்டால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதால் கவனமாகச் செய்வது பாதுகாப்பானது'' என்கிறார் மருத்துவர் விக்ரம்குமார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...