Skip to main content

Doctor Vikatan: கோடையிலும் விடாமல் வாட்டும் இருமல்... தேன் சாப்பிட்டால் சரியாகுமா?

Doctor Vikatan: என் வயது 50. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் கோடைக்காலம் ஆரம்பித்தது முதல் எனக்கு இருமல் விடாமல் தொடர்கிறது. வைரஸ் காயச்சல் வந்து சரியாகிவிட்டது. ஆனால், இருமல் மட்டும் நின்றபாடில்லை. மருத்துவரிடம் கேட்டால் இருமல் மருந்து குடிக்க வேண்டாம் என்கிறார். இருமலுடன் இன்னும் எத்தனை நாள்கள் அவதிப்படுவது... இதற்கு என்னதான் தீர்வு?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்

தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னை

உங்களைப் போலவே நிறைய பேருக்கு இந்த வருடம் இருமல் மிக அதிகமாக இருப்பதையும் பல நாள்கள் தொடர்வதையும் பார்க்கிறோம். அதற்கு முக்கியக் காரணம் காற்று மாசுபாடுதான்.  ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் (Air Quality Index) எனப்படும் காற்றின் மாசு அளவுக் குறியீடு இந்த வருடம் மிக அதிகமாக இருக்கிறது. 

வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு, அதன் தொடர்ச்சியாக இருமல் பல நாள்களுக்குத் தொடர்கிறது. எல்லா இருமலுக்கும் இருமல் சிரப் குடிக்க வேண்டாம் என்பதே பெரும்பாலான மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கும். மருந்து வேண்டாம் என்றால் இருமலுக்கு என்னதான் தீர்வு என்ற கேள்வி, காலங்காலமாக பலருக்கும் இருக்கிறது.

மருத்துவத் துறையில் மிகவும் நம்பகமான ஒன்றாகக் கருதப்படும் காக்ரேன் ரெவ்யூவில் 5 ஆயிரம் நபர்களைக் கொண்ட ஆய்வு ஆதாரங்களை வைத்து இது குறித்து தகவல்கள் திரட்டினார்கள். அதன்படி அதில் எந்தத் தீர்வும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு சிறிய டிரையலில் குழந்தைகளுக்கு இருமல் வரும்போது தேன் பலன் தரலாம் என்று சொல்லப்பட்டது. அதுவும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.  அந்த வகையில் இருமலுக்கு மேஜிக் தீர்வு என எதுவும் கிடையாது. மருத்துவர்கள் இருமலை இருவகையாகப் பிரிப்போம். சுவாசப்பாதையின் மேல் பகுதியில் பாதிப்பிருந்தால் அலர்ஜியின் காரணமாக ஏற்பட்ட இருமலாக இருக்கும். அலர்ஜிக்கான மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார். 

தேன், மஞ்சள் வைத்தியங்கள் எல்லாம் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

கீழ்ப் பகுதியில் பாதிப்பு என்றால்,  உங்கள் நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாய் தசைகள் திடீரென  தன்னிச்சையாகச் சுருங்குவதைக் குறிக்கும் பிராங்கோஸ்பாசம் (Bronchospasm) பிரச்னைக்கான மருந்துகளைப் பரிந்துரைப்பார். இருமல் விடாமல் தொடரும் பட்சத்தில், அளவுக்கதிக சூடான அல்லது அளவுக்கதிக குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடக்கூடாது. ஏசி செய்யப்பட்ட சூழலில் இருந்து சட்டென, கொளுத்தும் வெயில் உள்ள இடத்துக்குப் போகக்கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட வெப்பநிலையில் இருந்துவிட்டுதான் நகர வேண்டும். வெதுவெதுப்பான நீர், மிதமான சூட்டில் சூப் போன்றவற்றைக் குடிக்கலாம். 

இருமலைக் கட்டுப்படுத்தும் மிட்டாய்கள் ஓரளவு உதவலாம்.  வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து வாய்க்கொப்பளிப்பதும் தொண்டைக்கு இதமாக இருக்கும்.  தேன், மஞ்சள் வைத்தியங்கள் எல்லாம் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இருமல் என்பது மெள்ள மெள்ளத்தான் குறையும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வதுடன், வாழ்க்கைமுறையிலும் சில மாற்றங்களைப் பின்பற்ற வேண்டும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...