''பீரியட்ஸ் 'excuse' அல்ல'' விவாதத்தைக் கிளப்பிய நடிகை ஸ்ரீலீலாவின் வைரல் பேச்சு: மருத்துவ விளக்கம்!
சமீபத்தில் நடிகை ஸ்ரீலீலா மாதவிடாய் மற்றும் அதனால் ஏற்படும் வலிகள் குறித்துப் பேசிய கருத்துகள் இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. "மாதவிடாய் என்பது ஒரு நோய் அல்ல, அது இயற்கையான உடலியல் நிகழ்வு. அந்த நேரத்தில் ஏற்படும் வலியைப் பெரிதுபடுத்தாமல், நம் வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும். பீரியட்ஸை எக்ஸ்கியூஸாகச் சொல்லக்கூடாது" என்ற தொனியில் அவர் பேசியது சமூக வலைதளங்களில் பலரது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. சிலருக்குக் கடுமையான வயிற்று வலி, முதுகு வலி மற்றும் மனநிலை மாற்றங்கள் (Mood swings) ஏற்படும். 'ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய்க்கால அனுபவம் மாறுபடும். சிலருக்குக் கடுமையான வயிற்று வலி, முதுகு வலி மற்றும் மனநிலை மாற்றங்கள் (Mood swings) ஏற்படும். இதை சாதாரண விஷயம் என்று சொல்வது அந்த வலியைக் கொச்சைப்படுத்துவது போன்றது. ஒரு பிரபலமாக இருந்து கொண்டு இப்படிப் பேசுவது, உழைக்கும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை போன்ற உரிமைகளைப் பெறுவதில் பின்னடைவை ஏற்படுத்தும்' எனப் பலர் பதிவிட்டு வருகின்றனர். சிலர் ஸ்ரீலீலாவின் கருத்தை 'நேர்மறையான அணுகுமுறை' (Po...