Skip to main content

Doctor Vikatan: அரிப்புக்காக காது குடைந்தபோது செவிப்பறையில் ஓட்டை... கேட்கும் திறன் பாதிக்குமா?

Doctor Vikatan:  எனக்கு எப்போதும் காதுக்குள் ஒருவித அரிப்பு இருந்துகொண்டே இருக்கும். அதுபோன்ற நேரங்களில், நான் என் காதுகளைச் சுத்தம் செய்வேன் அல்லது குடைவேன், சிறிது நேரத்திற்குப் பிறகு அரிப்பு நின்றுவிடும். சமீபத்தில், நான் இப்படிச் செய்துகொண்டிருந்தபோது, ஒரு ஹேர்பின் (Hairpin) தவறுதலாக உள்ளே குத்தி ரத்தம் வந்துவிட்டது. அதோடு எனக்குக் காது கேட்பதிலும் சிரமம் ஏற்பட்டது. நான் மருத்துவரை அணுகியபோது, எனது செவிப்பறையில் ஓட்டை (Perforated eardrum) விழுந்துவிட்டதாகக் கூறி சில மருந்துகளைப் பரிந்துரைத்தார். இந்தப் பிரச்னையைக் குணப்படுத்த முடியுமா அல்லது இது நிரந்தர செவித்திறன் இழப்பிற்கு வழிவகுக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா

காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா
காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா

காதுகளில் அரிப்பு ஏற்படும்போது, காதுகளைக் குடையவே கூடாது. காதுகளைக் குடையக்குடைய, அரிப்பும் இன்னும் அதிகமாகும். அதனால் நீங்கள் காது குடைவதும் அதிகமாகும். அதனால்தான் காதுகளைக் குடையவோ, நீங்களாகவே சுத்தம் செய்யவோ கூடாது என மருத்துவர்கள் காலங்காலமாக அறிவுறுத்திக் கொண்டிருக்கிறோம்.

காதுகளைக் குடைவதால், உள்ளே உள்ள சருமம் பாதிக்கப்படலாம். அப்படித்தான் உங்களுக்கு செவிப்பறையில் ஓட்டை விழுந்துள்ளது. இதை  'ட்ரமாட்டிக் பெர்ஃபோரேஷன்' (Traumatic Perforation) என்று சொல்வோம். அதாவது  செவிப்பறையில் ஏற்பட்ட கிழிசல்.  இந்தப் பிரச்னையானது 99 சதவிகிதம், தானாகவே சரியாகிவிடக்கூடியது.

செவிப்பறையில் கிழிசல் ஏற்படும்போது, அங்கே ஒரு கட்டி போன்று உருவாகும்.  அந்தக் கட்டிதான், செவிப்பறையில் ஏற்பட்ட பாதிப்பு மெள்ள மெள்ள ஆறுவதற்கு உதவும்.  எனவே, இதில் தண்ணீர் படக்கூடாது. நீங்களாக சுய மருத்துவம் என்ற பெயரில் காதுகளுக்கான டிராப்ஸ் வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. முதல் வேலையாக நீங்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டும். மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு, காயம் ஆறுவதற்கான மருந்துகளைக் கொடுப்பார்.  ஆன்டிபயாட்டிக் மருந்துகள், சளி பிடிக்காமலிருப்பதற்கான மருந்துகள், சில வைட்டமின்கள் போன்றவற்றைப் பரிந்துரைப்பார். 

'ஆட்டோஎண்டோஸ்கோப்பி' (Otoendoscopy) பரிசோதனையை மேற்கொள்வார். ஐந்துநாள்களில் ஒருமுறை, பிறகு இரண்டு வாரங்கள் கழித்து ஒருமுறை என குறிப்பிட்ட இடைவெளிகளில் அந்தப் பரிசோதனையை மேற்கொள்வார்.

 'ஆட்டோஎண்டோஸ்கோப்பி' (Otoendoscopy) பரிசோதனையை மேற்கொள்வார். ஐந்து நாள்களில், பிறகு இரண்டு வாரங்கள் கழித்து ஒருமுறை என குறிப்பிட்ட இடைவெளிகளில் அந்தப் பரிசோதனையை மேற்கொள்வார்.

செவிப்பறையானது முற்றிலுமாக ஆறிவிட்டதா என்பதை உறுதிசெய்யும்வரை இந்தச் சோதனை தேவைப்படும்.  ஏற்கெனவே சொன்னது போல, 99 சதவிகிதம் இது சரியாகிவிடும். ஒருவேளை அப்படிச் சரியாகாத பட்சத்தில், செவிப்பறையைப் பழுதுபார்க்கும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.  காதின் பகுதியை வெட்ட வேண்டிய அவசியமின்றி, எண்டோஸ்கோப்பி முறையிலேயே இந்தச் சிகிச்சையைச் செய்துவிட முடியும். அரிதாக சிலருக்கு காதின் பின்பக்கத்தில் வெட்டி, இந்தப் பழுதுபார்க்கும் சிகிச்சை மேற்கொள்ளப்படும். 

பொதுவாக, இதுபோன்ற பிரச்னைகளில் கேட்கும் திறன் பாதிக்கப்படாது. ஒருவேளை அதில் சிரமங்களை உணர்ந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். ஆடியோகிராம் பரிசோதனையும் செய்து, கேட்கும் திறனில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்று மருத்துவர் செக் செய்வார். அதற்கேற்ப சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...