Skip to main content

Doctor Vikatan: காய்ச்சல் வந்தாலே ஆன்டிபயாடிக் (Antibiotics) மாத்திரைகள் உட்கொள்ள வேண்டுமா?

Doctor Vikatan: சாதாரண சளி, காய்ச்சல் ஏற்படும்போது மருந்துக் கடைகளில் கேட்டால் காய்ச்சல் மாத்திரையோடு, ஆன்டிபயாடிக் மாத்திரைகளும் கொடுக்கிறார்கள்.   எப்போது காய்ச்சல் ஏற்பட்டாலும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளையும் சேர்த்துதான் எடுக்க வேண்டுமா...  அல்லது காய்ச்சல் அதிகமானால் மட்டும் எடுக்க வேண்டுமா...?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, மயக்கவியல் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவர் வான்மதி

மயக்கவியல் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவர் வான்மதி

காய்ச்சல் என்பது ஒரு நோயல்ல, அது ஒரு நோயின் அறிகுறி (Symptom) மட்டுமே. அதாவது நம் உடலுக்குள் ஏதேனும்  நோய்த்தொற்று (Infection) ஏற்பட்டிருந்தால், அதன் வெளிப்பாடாகவே காய்ச்சல் வரும். 
காய்ச்சலுக்கான காரணங்கள் ஏராளம் இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில்,  சாதாரண சளி, ஃப்ளூ காய்ச்சல் என அதற்கு வைரஸ் தொற்று (Viral Infection) தான் முக்கியமான காரணமாக இருக்கும். 

சில நேரங்களில் பாக்டீரியா தொற்றுகளாலும் காய்ச்சல் வரலாம். உதாரணத்துக்கு, நீரிழிவு நோயாளிகளுக்கு சருமத்தில் ஏற்படும் புண்கள், பற்களில் ஏற்படும் தொற்று, கணைய அழற்சி, பித்தப்பைக் கற்களால் ஏற்படும் சீழ்த்தொற்று என வேறு காரணங்களாலும் காய்ச்சல் வரலாம். 

வைரஸ் தொற்று, பாக்டீரியா தொற்று, பூஞ்சைத் தொற்று என தொற்றுகளில் பல வகைகள் உண்டு. இவற்றில்  பாக்டீரியா நுண்கிருமிகளால் ஏற்படும் தொற்றுகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியவைதான்  ஆன்டிபயாடிக் மருந்துகள். எனவே, வைரஸ் காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக்  மருந்துகள் கொடுப்பதால் எந்தப் பயனும் இருக்காது. பெரும்பாலான நேரங்களில் நமக்கு ஏற்படும் காய்ச்சல், சளிக்கு வைரஸ் தொற்றுதான் காரணமாக இருக்கிறது. அப்படிப்பட்ட நேரத்தில், தேவையற்ற ஆன்டிபயாடிக்  எடுத்துக்கொள்வதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தவிர,
நம் உடலுக்கு நன்மை செய்யும் சில கிருமிகளையும் இந்த மருந்துகள் அழித்துவிடும்.

காய்ச்சல் 100 டிகிரி முதல் 101 டிகிரி வரை இருந்தாலோ, மாலை நேரத்தில் லேசான குளிர் இருந்தாலோ, உடல் சோர்வு அதிகமாக இல்லையென்றால் காய்ச்சலைக் குறைக்க பாரசிட்டமால் (Paracetamol) போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

 'கம்யூனிட்டி இண்டியூஸ்டு ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ்'  (Community-induced antibiotic resistance ) என்று சொல்லக்கூடிய நிலை உருவாகும். 
 அதாவது தேவையில்லாத ஆன்டிபயாடிக் மருந்துகளின் விளைவால்,  அந்தக் கிருமிகள் அந்த மருந்துக்கு எதிராகத் தங்களை மாற்றிக்கொண்டு 'ஸ்மார்ட்' ஆகிவிடும். இதனால் பிற்காலத்தில் கடுமையான தொற்று ஏற்படும்போது, எந்த மருந்தும் வேலை செய்யாத நிலை உருவாகலாம்.

காய்ச்சல் 100 டிகிரி முதல் 101 டிகிரி வரை இருந்தாலோ, மாலை நேரத்தில் லேசான குளிர் இருந்தாலோ, உடல் சோர்வு அதிகமாக இல்லையென்றாலலோ காய்ச்சலைக் குறைக்க பாராசிட்டமால் (Paracetamol) மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும். சத்தான உணவுகளை உட்கொண்டு, நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றித் தானாகவே வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...