வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், கருத்தரிப்பு சிகிச்சையிலும் ஏ.ஐ., தொழில் நுட்பம் ஆதிக்கம் செலுத்த உள்ளதாக கருத்தரிப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் நான்காவது சர்வதேச ‘நாளமில்லா சுரப்பியல், கருவியல் மற்றும் எண்டோஸ்கோபி’ (ஐ.சி.இ.இ.இ.,) 2026 மாநாடு நடைபெற்றது. புளூம் லைஃப் மருத்துவமனை ஒருங்கிணைத்து நடத்திய நிகழ்வில், இந்தியா முழுவதிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட முன்னணி மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு நிபுணர்கள், ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். கருத்தரிப்பு சிகிச்சையிலும் ஏ.ஐ உலகளவில் புகழ் பெற்ற ஐ.வி.எஃப் நிபுணர் கௌதம் அல்லாபாடியா, மெடிஸ்கேன் நிறுவனர் டாக்டர் சுரேஷ் சேஷாத்ரி மற்றும் மூத்த நிபுணர் டாக்டர் கௌரிசங்கர் பரமசிவம், வாணி புஜாரி, அபூர்வா பல்லம் ரெட்டி, ரமணி தேவி, சுதர்சன் மற்றும் பிஜாய் பாலகிருஷ்ணன் உட்பட பல மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். புளூம்லைஃப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், மாநாட்டின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் கவிதா கௌதம்,"மருத்துவத் துறையில் நாளுக்கு நாள் பெருகி வரும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வது மிக அவசியம். நோயாளிகளுக்குச் சிறந...