Skip to main content

Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில் அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன்... ஆன்டிபயாடிக் எடுக்கலாமா?

Doctor Vikatan: என் வயது 48. மெனோபாஸ் அறிகுறிகள் ஆரம்பித்துவிட்டன. இத்தனை வருடங்களாக இல்லாமல் இப்போது எனக்கு அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன் வருகிறது. ஒன்றிரண்டு முறை மருத்துவரைச் சந்தித்தபோது ஆன்டிபயாடிக் மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்கள்.

ஒவ்வொரு முறை இன்ஃபெக்ஷன் வரும்போதும் மருத்துவரிடம் செல்ல வேண்டுமா.... அதே ஆன்டிபயாடிக் மாத்திரைகளைத் தொடர்ந்து எடுக்கலாமா?

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

 நித்யா ராமச்சந்திரன்
நித்யா ராமச்சந்திரன்

மெனோபாஸை நெருங்கும் பெண்களுக்கு அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன் எனப்படும் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது சகஜம். அவர்களது உடலில் ஹார்மோன் அளவுகள் குறையத் தொடங்குவதால் வெஜைனா பகுதி வறண்டுபோகும். அந்த வறட்சி, சிறுநீர்த் தொற்றுக்குக் காரணமாகலாம்.  

உங்களுக்கு அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஒருவேளை அது சர்க்கரைநோய் பாதிப்புக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே, மருத்துவரை அணுகினால் மட்டுமே அவர் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு நீரிழிவு இருக்கிறதா என்பதைச் சந்தேகித்து அதற்கான டெஸ்ட்டை எடுக்கச் சொல்வார். சர்க்கரைநோய் இல்லாதவர்களுக்கு, அடிக்கடி தொற்று வராமலிருக்க வழிகளைச் சொல்வார். 

யூரினரி இன்ஃபெக்ஷன் ஏற்படும்போது மருத்துவர் சிறுநீர்ப் பரிசோதனைக்குப் பரிந்துரைப்பார். அந்தச் சோதனையில் தொற்றுக்குக் காரணமான கிருமி கண்டுபிடிக்கப்பட்டு அதற்கேற்பவே மருந்துகள் பரிந்துரைக்கப்படும். ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஐந்து நாள்கள் முதல் இரண்டு வாரங்கள்வரை  தீவிரத்தைப் பொறுத்து மருத்துவர் பரிந்துரைப்பார்.

ஆனால், பலரும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்த ஒன்றிரண்டு நாள்களிலேயே பிரச்னை சரியானதாக உணர்ந்ததும் மீதமுள்ள மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் நிறுத்தி விடுவார்கள். பரிந்துரைத்த நாள்களுக்கு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் விடும் பட்சத்தில் அடுத்த முறை அதே ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் அந்த நபரின் உடலில் வேலை செய்யாது. 

ஆன்டிபயாட்டிக்கை முழுமையாக எடுத்துக் கொள்ளாமல் பாதியிலேயே நிறுத்தும்போது அடுத்த முறை பாதிப்போடு வரும்போது அந்த நபருக்கு அதே மருந்து வேலை செய்யாது.

பொதுவாக ஆன்டிபயாடிக் பரிந்துரைக்கும்போது குறைவான வீரியத்திலிருந்துதான் தொடங்குவார்கள். அந்த மருந்து வேலை செய்யவில்லை என்ற நிலையில்தான் அதன் தீவிரம் அதிகரிக்கப்படும்.  

ஆன்டிபயாட்டிக்கை முழுமையாக எடுத்துக் கொள்ளாமல் பாதியிலேயே நிறுத்தும்போது அடுத்த முறை பாதிப்போடு வரும்போது அந்த நபருக்கு அதே மருந்து வேலை செய்யாது. வேறுவழியே இன்றி, வீரியமான ஆன்டிபயாடிக்கைப் பரிந்துரைக்க வேண்டி வரும். இது யூரினரி இன்ஃபெக்ஷனுக்கு மட்டுமல்ல, சளி இருமல் உள்ளிட்ட எந்த விதமான தொற்றுக்குப் பரிந்துரைக்கும் மருந்துக்கும் பொருந்தும்.  

மருத்துவர் ஒருமுறை பரிந்துரைத்த மாத்திரைகளை, அடுத்தடுத்த முறை பிரச்னை வரும்போதும் நீங்களாகவே எடுத்துக்கொள்வதும் ஆபத்தானது. போனமுறை வந்த அதே காரணத்தால்தான் இந்த முறையும் இன்ஃபெக்ஷன் வந்ததா என்று தெரியாமல் நீங்களாக மாத்திரைகளைத் தொடர்வது பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே, உங்களுக்கு அடிக்கடி இந்தப் பிரச்னை வருவதை மருத்துவரிடம் தெரியப்படுத்துங்கள். சர்க்கரைநோய்க்கான டெஸ்ட்டை எடுத்துப் பாருங்கள். இவற்றை அடிப்படையாக வைத்து மருத்துவர் உங்களுக்கான சிகிச்சையை முடிவு செய்வார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...