Doctor Vikatan: எங்கள் வீட்டில் அடிக்கடி சோயா உணவுகள் சமைப்பது வழக்கம். சோயா சங்க்ஸ் சேர்த்த பிரியாணி, கிரேவி, சோயா சுண்டல் என ஏதேனும் ஒன்று இருக்கும். ஆண் குழந்தைகளுக்கு சோயா உணவுகள் கொடுத்தால், அவர்களுக்கு மார்பக வளர்ச்சி அதிகரிக்கும் என்று சமீபத்தில் ஒரு தகவல் கேள்விப்பட்டேன். அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் மனித உடலுக்குத் தேவையான 9 முக்கியமான அமினோ அமிலங்களும் (Essential Amino Acids) சோயாவில் இருப்பதால், அது ஒரு முழுமையான புரதச்சத்தாக (Complete Protein) கருதப்படுகிறது. சாதாரண பருப்பு வகைகளில் 100 கிராமிற்கு 20 முதல் 25 கிராம் வரை மட்டுமே புரதம் இருக்கும். ஆனால், சோயாவில் 100 கிராமிற்கு 40% முதல் 43% வரை புரதச்சத்து நிறைந்துள்ளது. சோயாவில் ஃபிளேவனாய்டு (Flavonoid) எனப்படும் ஒருவகை புரதச்சத்து உள்ளது. இதில் ஈஸ்ட்ரோஜென் அதிகப்படியாக இருப்பதால், இது உடலுக்கு மிகவும் நல்லது. சோயாவில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புச் சத்துகள் மற்றும் இரும்புச் சத்துகள் அதிக அளவில் உள்ளன. இந்தக் காரணங்களால்தான் மற...