Doctor Vikatan: சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் பீல்-ஆஃப் (Peel-off) மாஸ்க்குகள் உண்மையில் பயனுள்ளவையா... அவற்றை இரவு முழுவதும் முகத்திலேயே வைத்திருப்பது பாதுகாப்பானதா... மேலும், அவை 'கிளாஸ் ஸ்கின்' (glass skin) மற்றும் இளமையான தோற்றத்தைத் தரும் என்பதும் உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா பீல்-ஆஃப் (Peel-off) மாஸ்க் பயன்படுத்தும்போது, தற்காலிகமாக நல்ல பலனைத் தருவது போலத் தோன்றலாம். ஆனால், உரித்து எடுக்கும் தன்மை கொண்ட அத்தகைய மாஸ்க்கை அடிக்கடி பயன்படுத்தினாலோ அல்லது இரவு முழுவதும் முகத்தில் அப்படியே வைத்திருந்தாலோ அது உங்கள் சருமத்தின் பாதுகாப்பு அடுக்கை (skin barrier) சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. இளமையான தோற்றத்தைப் பெற பீல் ஆஃப் மாஸ்க்குக்கு (Peel-off masks) பதில், தரமான 'ஓவர்நைட் ஸ்லீப்பிங் மாஸ்க்குகளை' (sleeping masks) தேர்ந்தெடுங்கள். கூடவே, சருமம் வறண்டு போகாமல் போதுமான நீர்ச்சத்துடன் (hydration) வைத்திருப்பது, சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க சன் ஸ்கிரின் உபயோகிப்பது ஆகிய...