Skip to main content

Doctor Vikatan: உடலில் பல இடங்களிலும் வலி... கெட்ட கொழுப்பு அதிகமானதன் அறிகுறி என்பது உண்மையா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக உடல் வலி இருக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால், இப்படித்தான் உடலின் பல பகுதிகளிலும் வலி வரும் என்று கேள்விப்பட்டேன். அதுஉண்மையா... கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை வேறு அறிகுறிகள் மூலம் உணர முடியுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி 

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி
நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன், கொழுப்பு குறித்த சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.

கொலஸ்ட்ராலில் பல வகைகள் உள்ளன. இதில் சில கொழுப்புகள், புரத வளர்சிதை மாற்றம் (Protein metabolism) போன்ற உடல் இயக்கங்களுக்கு அவசியமானவை. ஆனால், சில கொழுப்புகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை.

ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும்போது, ரத்தத்தின் அடர்த்தி (Density) அதிகமாகிறது. இதனால் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் தாமதப்படும்போது, கை, கால் விரல்கள் மற்றும் பாதங்களில் லேசான வலி அல்லது சுருக்கென்று குத்துவது போன்ற உணர்வு ஏற்படலாம்.

பெரிய ரத்த நாளங்களின் உள்சுவர்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. இதன் விளைவாக தோள்பட்டை வலி, பின் கழுத்து வலி, தாடை மற்றும் வாய்ப் பகுதிகளில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றில் மிக மோசதானது நெஞ்சுவலி. 

ஆன்ஜினா (Angina) எனப்படும் இந்த நெஞ்சு வலி, இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவதாலும் வரும்... இதயத் தமனிகளில் கொழுப்பு படிவங்கள் (Plaque) உருவாவதாலும் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நெஞ்சுவலி  ஏற்படலாம்.

இதன் விளைவாக தோள்பட்டை வலி, பின் கழுத்து வலி, தாடை மற்றும் வாய்ப் பகுதிகளில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

நீங்கள் கேட்டதுபோல, கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதன் விளைவாக, மேற்குறிப்பிட்ட வலிகள் தவிர, கொலஸ்ட்ரால் அதிகரிப்பது என்பது வேறு சிலஅறிகுறிகளையும் காட்டலாம். உதாரணத்துக்கு, கண்களுக்குக் கீழே வெள்ளையாகப் படிதல் (Xanthelasma), தேவையற்ற இடங்களில் கொழுப்பு சேருவதால் உடல் எடை அதிகரித்தல், எப்போதும் சோர்வாக உணருதல் (Fatigue) மற்றும் சுறுசுறுப்பின்மை, மன அழுத்தம் மற்றும் மூளை சுறுசுறுப்பின்றி மந்தமாக இருத்தல் போன்றவை கொலஸ்ட்ரால் அதிகரித்திருப்பதன் அறிகுறிகளாக இருக்கலாம்.

இதைத் தெரிந்துகொள்ள, வெறும் 'டோட்டல் கொலஸ்ட்ரால்' (Total cholesterol) பரிசோதனை மட்டும் செய்யாமல், குறைந்தது 8 முதல் 10 மணிநேரம் வரை உணவு உட்கொள்ளாமல் (Fasting) இருந்து 'ஃபாஸ்டிங் லிப்பிட் புரொஃபைல்' (Fasting Lipid Profile) பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை முடிவுகளுடன் தகுந்த மருத்துவரை அணுகி, உங்கள் உடலுக்குத் தேவையான மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...