Doctor Vikatan: கொய்யா இலை சூப் மற்றும் தேநீர் குடித்தால் சர்க்கரை நோய் குறையும், குணமாகும் என்று சிலர் கூறுகிறார்கள். சில கடைகளில் கொய்யா இலைப் பொடியைக்கூட விற்பனை செய்கிறார்கள். உண்மையாகவே கொய்யா இலைக்கு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டா... அது உண்மை என்றால், கொய்யா இலையை எப்படி உபயோகப்படுத்த வேண்டும்? -Jay, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார். சித்த மருத்துவர் விக்ரம்குமார் சர்க்கரை நோயாளிகள் அனைவரும் முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சர்க்கரைநோய் வந்துவிட்டால், மறுபடி அதை இல்லாமல் செய்வதோ, முழுமையாக குணப்படுத்துவதோ சாத்தியமில்லை. எந்த மருந்தாலும் அதைச் செய்ய முடியாது. ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மட்டும்தான் சாத்தியம். கொய்யா இலையைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஒரு மூலிகைக் குடிநீராக எடுத்துக்கொள்வதில் சில நன்மைகள் இருப்பதை மறுக்க முடியாது. இதில் உள்ள துவர்ப்புச் சுவை மற்றும் 'பைட்டோ நியூட்ரியன்ட்ஸ்' (Phytonutri...